Home கலை உலகம் நயன்தாராவுக்கு அமிதாப் கையால் நந்தி விருது

நயன்தாராவுக்கு அமிதாப் கையால் நந்தி விருது

417
0
SHARE
Ad

Nayanthara-Sliderஹைதராபாத்,ஏப்ரல் 15- தெலுங்கு திரையுலகில் வழங்கப்படும் உயரி விருதான நந்தி விருது, நயன்தாராவுக்குக் கிடைத்துள்ளது.

நந்தி விருதினைப் பெற்றதை விட, அதனை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சான் கையால் பெற்றதை நினைத்து பெருமிதம் அடைந்துள்ளார் நயன்தாரா.

ஹைதராபாத்தில் 11ம் தேதி நடைபெற்ற இவ்விழாவில், ஸ்ரீ ராமராஜ்யம் படத்தில் சீதாவாக நடித்ததற்காக, நடிகை நயன்தாராவுக்கு நந்தி விருது வழங்கப்பட்டது. மேலும், ஸ்ரீ ராமராஜ்யம் திரைப்படம் சிறந்த படத்துக்கான விருதையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.