Home One Line P2 சூரரைப் போற்று முன்னோட்டம் வெளியானது!

சூரரைப் போற்று முன்னோட்டம் வெளியானது!

653
0
SHARE
Ad

சென்னை: அமேசான் பிரைம் காணொலி இணையத்தளத்தில் திரையிடப்படவுள்ள நடிகர் சூரியாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘சூரரைப் போற்று’ படத்தின் முன்னோட்டக் காணொலி இறுதியாக நேற்று வெளியிடப்பட்டது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் கதாபாத்திரத்தை சூரியா ஏற்று நடிகிறார்.

சூரியா இப்படத்தில் ஒரு கனவுள்ள ஒரு மனிதர் – விமானப் பயணத்தை அனைத்து இந்தியர்களுக்கும் மலிவாக்குவது குறித்துப் பேசுகிறார். அதனை சூரரைப் போற்று சரியாகக் காண்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றே கூறலாம்.

#TamilSchoolmychoice

முன்னதாக ஏப்ரல் 9- ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இந்த படம், கொவிட்-19 தொற்று நெருக்கடி காரணமாக அக்டோபர் 30- ஆம் தேதி அமேசானில் வெளியிடப்பட முடிவு செய்யப்பட்டது.

இத்திரைப்படம் இறுதியாக நவம்பர் 12- ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

சுதா கொங்கரா இத்திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.