Home One Line P1 சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தம்!

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, இந்தியாவுடன் ஒப்பந்தம்!

708
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியா- சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும் என்று கூறியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லை அருகே சீனா பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களை குவித்து வைத்துள்ளது. பிரச்சனையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சண்டைகள் மூண்டு பல உயிர்களும் பறிபோயின.

இந்நிலையில், இந்தியாவிற்கு வருகைப் புரிந்துள்ள, அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பேயோ, இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனைக்கு மத்தியில், இந்தியாவுக்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜூலை 15- ஆம் தேதியன்று கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்கள் பற்றியும் அவர் பேசினார்.

“கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்நீத்த வீரர்கள் உட்பட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இந்திய இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு சென்றோம்.

“இந்தியாவின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும்,” என்று பாம்பியோ பேசியுள்ளார்.

சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.