Home One Line P1 இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

இந்திரா காந்தி: காவல் துறைத் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்

555
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாலர் பள்ளி ஆசிரியர் எம். இந்திரா காந்தி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் காவல் துறைத் தலைவர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

தனது முன்னாள் கணவர் முகமட் ரிட்சுவானைக் கைதுசெய்து, அவருடைய மகள் பிரச்சன்னா டிக்சாவை தம்மிடம் ஒப்படைக்காததால் இந்த நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

ரிட்சுவான் இந்திரா காந்தியின் இளைய மகள் பிரசன்னா டிக்சாவுடன் 2009-இல் தலைமறைவானார்.

#TamilSchoolmychoice

காவல் துறைத் தலைவர் பொதுத் துறையில் இருந்துக் கொண்டு தவறான குற்றச்சாட்டைச் செய்ததாக இந்திரா தனது அறிக்கையில் கூறினார். அவர் “தெரிந்தே மற்றும் / அல்லது பொறுப்பற்ற முறையில் கூட்டரசு நீதிமன்றத்தின் உத்தரவைப் புறக்கணித்துள்ளார் என்று அவர் கூறினார்.

பிரசன்னா டிக்சாவை ஒப்படைக்க மறுத்ததன் மூலம் ரிட்சுவானுக்கு அவமதிப்பு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, நீதிமன்றம் 2016- ஆம் ஆண்டில் காவல் துறையை ரிட்சுவானைக் கைது செய்ய உத்தரவிட்டது.

“காவல் துறைத் தலைவர், பொது பதவியில் இருப்பவர் என்ற முறையில், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பொதுமக்களின் நலனுக்காகவோ அல்லது ஒரு பகுதியினருக்காகவோ பயன்படுத்தத் தவறியதன் மூலம் தன்னைத் தவறாக நடத்திக் கொண்டார்” என்று இந்திரா தனது கூற்று அறிக்கையில் தெரிவித்தார்.

“காவல் துறைத் தலைவர்கள் மற்றும் பிற பிரதிவாதிகள் (அரசு மற்றும் உள்துறை மந்திரி) நடத்திய நடத்தை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பத்மநாதனை (ரிட்சுவானை) பிடிபடுவதைத் தவிர்க்க உதவியது.”

“பத்மநாதனின் இருப்பிடத்தைப் பற்றி அறிந்திருந்தாலும், அவர் (தற்போதைய காவல் துறைத் தலைவர்) பத்மநாதனைக் கைதுசெய்து பிரசன்னாவை என்னிடம் ஒப்படைக்கவில்லை என்று அவரது அறிக்கை தெளிவுபடுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்திரா காந்தி அதிரடி குழு (இங்காட் ) செய்தித் தொடர்பாளர் அருண் துரைசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திராவின் வழக்கு “பணத்தைப் பற்றியது அல்ல” என்று கூறினார்.

“இது இந்திராவைப் பற்றியது மட்டுமல்ல, எல்லோரும் கடைபிடிக்க வேண்டிய சட்ட உத்தரவு” என்று அவர் கூறினார்.