Home One Line P1 2021 வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும்!- மாமன்னர்

2021 வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும்!- மாமன்னர்

653
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நவம்பர் 6- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2021 வரவுசெலவுத் திட்டத்தை ஆதரிக்குமாறு, மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாதுடின், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டார்.

கொவிட் -19- ஐ கையாள்வதிலும், நாட்டின் பொருளாதாரத்தை புதுப்பிப்பதிலும் வரவு செலவுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை மாமன்னர் வலியுறுத்தியதாக அரண்மனை காப்பாளர் டத்தோ அகமட் பாடில் ஷம்சுடின் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“அல்-சுல்தான் அப்துல்லா, எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 2021 வரவுசெலவுத் திட்டம் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும், குறிப்பாக முன்னணி ஊழியர்களுக்கும், இந்த தொற்றுநோய் தொடர்ந்து பரவாமல் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் கொள்கைகளையும், முயற்சிகளையும் தொடரவும் தொடங்கவும் முக்கியமானது என்பதை வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“இது தொடர்பாக, அல்-சுல்தான் அப்துல்லா அனைத்து அரசியல் மோதல்களையும் நிறுத்துவதற்கும், மக்களின் நலன் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிப்பதற்கும் மாமன்னரின் ஆலோசனையை மதிக்குமாறு மக்களவை உறுப்பினர்களை அழைத்துள்ளார். இதனால் 2021 வரவுசெலவுத் திட்டம் எந்தவொரு குறுக்கீடு இல்லாமல் ஒப்புதல் அளிக்கப்படுகிறது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அல்-சுல்தான் அப்துல்லா இன்று இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற அமைச்சரவைக்கு முந்தைய கூட்டத்திற்கு பிரதமர் மொகிதின் யாசின் சந்திப்பிற்குப் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று காலை 8.00 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த ஓர் அமர்வில், அல்-சுல்தான் அப்துல்லா 2021 வரவுசெலவுத் திட்டம் குறித்த விளக்கத்தைப் பெற்ற பின்பு, நவம்பர் 6 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அதனை தாக்கல் செய்ய ஒப்புக் கொண்டார்.

2021 வரவுசெலவுத் திட்டம் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் கொவிட் -19 பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கையை நடத்த கவனம் செலுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.