Home One Line P1 ரோனி லியு காவல் துறை பிணையில் விடுவிப்பு!

ரோனி லியு காவல் துறை பிணையில் விடுவிப்பு!

520
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இடுகை மலேசியாவின் தற்போதைய அரசியல் நிலைமைக்கு தொடர்பில்லாதது என்று ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியு தெளிவுபடுத்தியுள்ளார்.

லியு காவல் துறை பிணையில் விடுவிக்கப்பட்டார. இதுவரை எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

“எனது முகநூல் இடுகை இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டது. இது மலேசியாவின் தற்போதைய நிலைமைக்கு எந்த தொடர்பும் இல்லை. அவசரகால பிரச்சனை தொடர்பான சமீபத்திய சர்ச்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களில் மட்டுமே எழுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

“ஒரு பொறுப்புள்ள அரசியல்வாதியாக, நான் எப்போதும் அரசியலமைப்பு முடியாட்சி மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கையை ஆதரிக்கிறேன். மலாய் ஆட்சியாளர்களின் நிறுவனத்தை நான் எப்போதும் மதிக்கிறேன். ” என்று கூறினார்.

இன்று காலை விசாரிப்பதற்காக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல் நிலையத் தலைமையகத்திற்கு வந்த லியு புக்கிட் அமான் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.

முன்னதாக, மாமன்னருக்கு எதிராக தேசத் துரோகக் கருத்து வெளியிட்டதை அடுத்து லியு கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் அதன் மன்னருக்கு எதிராக நடந்து வரும் எதிர்ப்புப் போராட்டாதை குறிப்பிட்டு அவர் தமது முகநூலில் பதிவிட்டிருந்தார்.

“இப்போது பாங்காக்கில், மக்கள் மன்னரை வேண்டாம் என்று சொல்கிறார்கள்” என்ற தலைப்பில் போராட்டத்தின் பல புகைப்படங்களை அவர் பதிவிட்டிருந்தார்.

“பாங்காக்கின் தற்போதைய நிலைமை”, என்று சீன மொழியிலும் அவர் எழுதியிருந்தார்.