Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசிய இந்தியர் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கான சிறப்பு கடனுதவி திட்ட அதிகாரப்பூர்வ நிகழ்வு

மலேசிய இந்தியர் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கான சிறப்பு கடனுதவி திட்ட அதிகாரப்பூர்வ நிகழ்வு

553
0
SHARE
Ad

teksi

கோலாலம்பூர், ஏப்ரல் 16- இந்திய தொழில் முனைவர் உருமாற்று சிறப்பு செயலகத்தின் ஏற்பாட்டில் மலேசிய இந்தியர் வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கான  சிறப்பு கடனுதவி திட்ட அதிகாரப்பூர்வ நிகழ்வு நடைபெறவுள்ளது.

எதிர்வரும்  18.4.2013 தேதி பத்துமலை ஆலய வளாகத்தில் காலை 8.30 மணியளவில்  முன்பதிவு நடைபெறும்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்வில் மலேசிய இந்திய வாடகைக் கார் ஓட்டுநர்கள் அனைவரும், வண்டியை வாடகைக்கு எடுத்து ஓட்டுபவர்களும் மற்றும் வண்டியை தவணை முறையில் விலைக்கு வாங்கி ஓட்டுபவர்களும் கலந்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் வழி, புதிதாக வாடகை கார் வாங்க கடனுதவி செய்து தரப்படும். அதேசமயம் பழைய வாடகைக் காருக்குப் பதிலாக புதிய கார் மாற்ற , முன் பணம் (கடனுதவி) வழங்கப்படும். மேலும் என்ஜிவி (NGV) பொருத்த பணம் (கடனுதவி) வழங்குவதோடு  வாடகைக் கார் பழுது பார்க்கவும், மாறுதல்கள் செய்யவும்  பணம் (கடனுதவி) செய்து தரப்படும்.

இந்நிகழ்வின் இறுதியில் வாடகைக் கார் ஓட்டுநர்களின் சிறப்பு கடனுதவி திட்டத்தின் விண்ணப்ப பாரம் வழங்கப்படும்.

மேல் விவரங்களுக்கு, 013-6979009, 013-399009, 013-6694977 என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.