Home உலகம் போலியோ மருந்தைக் கண்டறிந்த விஞ்ஞானி மரணம்!

போலியோ மருந்தைக் கண்டறிந்த விஞ்ஞானி மரணம்!

655
0
SHARE
Ad

hilaryபோலந்து, ஏப்ரல் 16- போலியோவிற்கான மருந்தை கண்டறிந்த விஞ்ஞானி டாக்டர் ஹிலாரி கோப்ரோவ்ஸ்கி (வயது 96) நேற்று பிலாடெல்பியாவில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார்.

போலந்து நாட்டை சேர்ந்த இவர் 1950-ம் ஆண்டு தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு போலியோ நோய் தடுப்பு மருந்தை கண்டுபிடித்தார். இது தவிர மேலும் பல நோய்களுக்கு மருந்து கண்டு பிடித்துள்ளார். இம்மருந்துகளின் உதவியுடன் அவற்றில் பல நோய்கள் தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.