Home One Line P1 பிரதமர் மொகிதின் யாசினின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பிரதமர் மொகிதின் யாசினின் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

782
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : இன்று கொண்டாடப்படும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மலேசிய இந்துக்களுக்கு தனது தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

தனது முகநூலில் பதிவிட்ட, சுமார் இரண்டு நிமிடம் 55 வினாடிகள் கொண்ட காணொலி மூலம் மொகிதின் யாசின் தனது தீபாவளி வாழ்த்துக்களை இந்திய சமூகத்தினருடன் பகிர்ந்து கொண்டார்.

புதிய சூழ்நிலையில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றித் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென அவர் தனது உரையில் மலேசிய இந்தியர்களைக் கேட்டுக்கொண்டார்.

#TamilSchoolmychoice

மேலும் தீபாவளியின் ஒளி போன்று விரைவில் நன்மைகள் நேர்ந்து சூழ்ந்துள்ள இருளும் அகலும் என அவர் தனதுரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

எதிர்காலம் குறித்த நம்பிக்கையோடும் மலேசியா எதிர்காலத்தில் மேலும் சிறந்த நாடாக விளங்குவதற்குப் பாடுபடும் விதத்திலும் தீபாவளியை அனைவரும் சிறப்பாக ஒற்றுமையோடு கொண்டாடுவோம் என அவர் மேலும் தெரிவித்துக் கொண்டார்,

காணொலியின் இறுதியில் ‘தீபாவளி வாழ்த்துக்கள்’ என தமிழிலேயே கூறி தனது தீபாவளி வாழ்த்துச் செய்தியை மொகிதின் யாசின் நிறைவு செய்தார்.

பிரதமரின் காணொலி தீபாவளி வாழ்த்துச் செய்தியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:

https://www.facebook.com/ts.muhyiddin/videos/1111206065977166