Home One Line P2 ஆஸ்ட்ரோ வானொலி மின்னியல் துறையில் அபார வளர்ச்சி

ஆஸ்ட்ரோ வானொலி மின்னியல் துறையில் அபார வளர்ச்சி

704
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தொற்றுநோய் காலக்கட்டத்தின் போது வானொலியின் முக்கியத்துவத்தையும் உசிதத்தையும் GfK Radio Audience Measurement (RAM)-இன் 2-ஆம் கணக்கெடுப்பு உறுதிப்படுத்தியிருக்கிறது.

தீபகற்ப மலேசியாவில், 93.6%, 10+ வயதுடைய நேயர்களை வானொலி சென்றடைந்திருக்கின்றது என்றும் இது முறையே 20.3 மில்லியன் வாராந்திர வானொலி கேட்பவர்களுக்கு சமம் என சமீபத்திய RAM ஆய்வு குறிப்பிடுகிறது.

20.3 மில்லியன் வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கையில், ஆஸ்ட்ரோ வானொலி தொடர்ந்து 74.3% சந்தைப் பங்கைக் கொண்டு முதன்மை வகிக்கிறது. மேலும், 15.1 மில்லியன் வாரந்திர வானொலி கேட்பவர்களின் எண்ணிக்கையுடன் ஆஸ்ட்ரோ வானொலி அதிக எண்ணிக்கையிலான நேயர்களைக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோ வானொலி அதன் மின்னியல் (டிஜிடல்) இருப்பை மொத்தமாக 331.2 மில்லியனாக வலுப்படுத்தியுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு:-

• மாதாந்திர காணொளி பார்வையாளர்களின் எண்ணிக்கை +60% உயர்ந்து, 176 மில்லியன் பதிவிட்டுள்ளது.

• மாதாந்திர மின்னியல் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) +36% உயர்ந்து, 18.7 மில்லியன் பதிவிட்டுள்ளது.

• மாதாந்திர சமூக வலைத்தளங்களின் அடைவுநிலை (reach) குறிப்பாக முகநூல் 102 மில்லியன் பதிவிட்டுள்ளது.

• மாதாந்திர சராசரி அகபக்க பார்வையாளர்களின் எண்ணிக்கை 11.2 மில்லியன் என பதிவிடப்பட்டுள்ளது. RAAGA – முதல் தர தமிழ் வானொலி, ERA – முதல் தர மலாய் வானொலி, HITZ – முதல் தர ஆங்கில வானொலி மற்றும் MY – முதல் தர சீன வானொலி என பதிவிட்டு ஆஸ்ட்ரோ வானொலி அலைவரிசைகள் அனைத்து மொழிகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளன. ஆஸ்ட்ரோ வானொலி தரங்கள், முதல் 10 தரவரிசையில் (Top 10 Brands ranking) 6 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

• ராகா தனது முதல் தர தமிழ் வானொலி நிலையை 1.3 மில்லியன் நேயர்களுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மேலும், அனைத்து மலேசிய வானொலி தரங்களுக்கு மத்தியில் 8 மணி 50 நிமிடங்களுடன் மிக உயர்ந்த ‘கேட்கும் நேரத்தை’ (time spent listening) பதிவிட்டுள்ளது.

• 6.2 மில்லியன் நேயர்களைக் கொண்ட ERA நாட்டின் சிறந்த வானொலி தரமாக தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, 1.3 மில்லியன் அடைவு நிலையுடன் மிக அதிகமான பிரத்தியேக நேயர்களைக் கொண்டுள்ளது.

• 4.8 மில்லியன் நேயர்களுடன் SINAR 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.

• GEGAR, கிழக்கு கடற்கரை வட்டாரங்களில் முதல் தர வானொலியாகும். இதன் அடைவு நிலை (reach) 17.9% வளர்ந்து முறையே 2.5 மில்லியன் நேயர்களைப் பதிவிட்டுள்ளது.

• HITZ அதன் சிறந்த ஆங்கில வானொலி தரத்தின் நிலையை 2.5 மில்லியன் நேயர்களுடன் தக்க வைத்துள்ளது. MIX & LITE முறையே 1.1 மில்லியன் மற்றும் 960,000 நேயர்களுடன் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நிலைகளை பிடித்துள்ளன.

• MY மற்றும் MELODY அதன் சிறந்த சீன வானொலி தரத்தின் நிலையை முறையே 2 மில்லியன் மற்றும் 1.2 மில்லியன் நேயர்களுடன் தக்க வைத்துக் கொண்டுள்ளன.

வானொலி ஊடாடும் (interactive) தன்மை மற்றும் சமூக கலந்துரையாடல்களைக் கொண்டது. ஆஸ்ட்ரோ வானொலி ஒரு தூய ஆடியோ அனுபவத்திலிருந்து பன்முக மற்றும் பல தளங்களில் கிடைக்கப்பெறும் சாதனமாக மாறிவிட்டது. அனைத்து மலேசியர்களையும் எதிரொலிப்பதை உறுதி செய்ய அதன் உள்ளடக்கம் நிர்வகிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, மற்றும் விநியோகிக்கப்படுகிறது.

MY, முதல் தர சீன வானொலி தனது முகநூலில் 1 மில்லியன் பின்தொடர்பவர்களைப் பதிவிட்டுள்ளது. MY, முதல் தர தமிழ் வானொலியான ராகா மற்றும் ZAYAN யுடியூப்பில் (YouTube) முறையே 100,000 சந்தாதாரர்களைப் பதிவிட்டுள்ளது.

மேலும், ERA ’Tiktokber’ உள்ளிட்ட மின்னியல் பிரச்சாரங்களின் மூலம் ERA Tik Tok அதன் கணக்கில் 4.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பதிவிட்டதோடு 300க்கும் மேற்பட்ட காணொலி சமர்ப்பிப்புகளையும் பெற்றன; Sekkisei Clear Wellness உடன் MY ‘Crime Scene Investigation’ மொத்தம் 1.1 மில்லியன் காணொலி பார்வையாளர்களை அடைந்தது; மற்றும், HITZ Morning Crew ‘Fight For Gotcha’ 400,000க்கும் மேலான சமூக வலைத்தள அடைவுநிலையையும் ஈடுபாட்டையும் பதிவிட்டுள்ளது.

இந்த ஆய்வு, வானொலி கேட்கும் பழக்கத்தை அறிய 6 வாரங்களுக்கும் மேலாக பாரம்பரிய வானொலி டைரிகள் (75%) மற்றும் மின்-டைரிகள் (25%) ஆகியவற்றின் கலவையுடன் தீபகற்ப மலேசியா முழுவதும் 6000 தனித்துவமான நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. 19 வானொலி தரங்கள் இதன் சந்தாதாரர்கள் ஆவர்.

தகவல்கள் மூலம்: GfK Radio Audience Measurement (RAM), Wave 2 2020 | Google Analytics, ஜூலை – செப்டம்பர் 2020 | Facebook Creator Studio, CrowdTangle, YouTube, ஜூலை – செப்டம்பர் 2020 | முகநூல், இன்ஸ்டாகிராம், கீச்சகம், யூடியூப், அக்டோபர் 2020 | Radioactive, ஜூலை – செப்டம்பர் 2020 | முகநூல் ஜூலை – செப்டம்பர் 2020