Home One Line P2 அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடன் 306 – டொனால்ட் டிரம்ப் 232

அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடன் 306 – டொனால்ட் டிரம்ப் 232

691
0
SHARE
Ad

வாஷிங்டன் : பல மாதங்கள் நீடித்த பிரச்சாரங்கள், கடந்த இரண்டு வாரங்களாக நீடித்த வாக்கு எண்ணிக்கை மீதான இழுபறிப் போராட்டம் – எல்லாம் ஒருவழியாக இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கின்றன.

ஜோ பைடன் ஏற்கனவே வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டார் என்றாலும், ஆகக் கடைசியான வாக்கு எண்ணிக்கைகளின்படி மொத்தமுள்ள 538 தேர்தல் வாக்கு தொகுப்புகளில் அவர் 306 வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

எஞ்சிய வாக்குகளான 232 வாக்குகளை நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

இந்தத் தெளிவான முடிவுகளைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு பைடனிடம் பதவியை ஒப்படைப்பதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமான போராட்டக் கள மாநிலங்களாகத் திகழ்ந்த அரிசோனா, ஜோர்ஜியா மாநிலங்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றதைத் தொடர்ந்து பைடனுக்கு இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

அரிசோனா மாநிலத்தின் 11 வாக்குகளும், ஜோர்ஜியா மாநிலத்தின் 16 வாக்குகளும் பைடனுக்குக் கிடைத்தன. நோர்த் கரோலினா மாநிலத்தின் 15 வாக்குகளும் டிரம்ப்புக்கு ஆதரவாகக் கிடைத்தன.

இதைத் தொடர்ந்து இறுதிக் கட்ட வாக்கு எண்ணிக்கையாக 306 வாக்குகள் பெரும்பான்மையோடு ஜோ பைடன் மிகத் தெளிவான வெற்றியைப் பெற்று தனது 78 வயதில் அமெரிக்காவின் மிக மூத்த அதிபராகப் பதவியேற்று சாதனை புரிகிறார்.

அது மட்டுமின்றி, அமெரிக்காவின் முதல் பெண் துணையதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார். முதல் கறுப்பினப் பெண் துணையதிபராகவும், முதல் இந்திய வம்சாவளி துணையதிபராகவும் பொறுப்பேற்கும் சாதனையையும் கமலா ஹாரிஸ் நிகழ்த்தியிருக்கிறார்.