கோலாலம்பூர் : எதிர்வரும் திங்கட்கிழமை நவம்பர் 16-ஆம் நாள் முதல் ராகா வானொலியில் ஒலியேறவிருக்கும் சில சிறப்பு நிகழ்ச்சிகளின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
திங்கள், 16 நவம்பர்
தீபாவளி 2020 மற்றும் அதன் படிப்பினைகள்
ராகா, காலை 6-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்
தீபாவளி கொண்டாடிய அனுபவத்தை ரசிகர்கள் கலக்கல் காலை குழுவினருடன் தொடர்புக் கொண்டு பகிர்ந்துக் கொள்ளலாம்.
செவ்வாய், 17 நவம்பர்
டாக்டர் பிரவீனாவுடன் சுகாதார நாள்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்
விருந்தினர்: கோலாலம்பூர் மருத்துவமனையிலிருந்து டாக்டர் பிரவீனா.
உடல்நலம் தொடர்பான தங்களின் சந்தேகங்களை இரசிகர்கள் டாக்டர் பிரவீனாவை அழைத்து தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
புதன், 18 நவம்பர்
நேர்காணல்: மலேசியாவின் முதல் தமிழ் செல்லப்பிராணி தொடர் இயக்குநருடன் ஒரு நாள்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்
விருந்தினர்: ராமராஜன் தொடரின் இயக்குநர், கபிலன் பூளோண்ட்ரன்
மலேசியாவின் முதல் தமிழ் செல்லப்பிராணி தொடரான ராமராஜன்-ஐப் பற்றின விவரங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் விருது பெற்ற இயக்குநர் கபிலன் பூளோண்ட்ரனின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.
வியாழன், 19 நவம்பர்
நேர்காணல்: புரோஸ்டேட் புற்றுநோய்
ராகா, காலை 9-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்
விருந்தினர்: சிறுநீரக நிபுணர், பந்தாய் மருத்துவ மையம்
ஆரம்பகால தடுப்பு, அறிகுறிகள், கையாளும் வழிகள், பயனுள்ள சிகிச்சைகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளும் பந்தாய் மருத்துவ மையத்தைச் சேர்ந்த சிறுநீரக நிபுணரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம்.
வெள்ளி, 20 நவம்பர்
நம்ப ஊரு படல்கள்
ராகா, காலை 8-10 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்
இரசிகர்கள் 90-ஆம் ஆண்டுகளில் வெளிவந்த உள்ளூர் பாடல்களைக் கேட்டு இரசிக்கலாம். மேலும் இப்பாடல்களை ஏன் அவர்களுக்கு விருப்பமானவை என்ற காரணங்களையும் அழைத்து பகிர்ந்துக் கொள்ளவும்.