Home One Line P2 மாஸ்டர் முன்னோட்டம் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது

மாஸ்டர் முன்னோட்டம் 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது

784
0
SHARE
Ad

சென்னை: தீபாவளி அன்று வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது 30 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சென்றுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் முன்னோட்டம் தீபாவளி பண்டிகை சிறப்பு வெளியீடாக யூடியூப்பில் வெளியிடப்பட்டது.

விஜய் இரசிகர்கள் கோரிக்கைக்கு ஏற்ப இந்த முன்னோட்டம் நவம்பர் 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) வெளியானது.

#TamilSchoolmychoice

இவ்வருட தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்தியாவில் கொவிட்-19 தொற்று காரணத்தினால், திரையரங்குகள் திறக்க இன்னும் அனுமதிகள் வழங்கப்படாததால், இது அடுத்த வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கீழே இணைப்பில் மாஸ்டர் திரைப்படத்தின் முன்னோட்டம்: