Home One Line P1 எம்சிஎம்சி: 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம்

எம்சிஎம்சி: 5 தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அபராதம்

556
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், பயனர்கள் தகவல்களை சரிபார்க்காமல் முன்கட்டண சிம் அட்டைகளை பதிவு செய்ததற்காக 750,000 ரிங்கிட் அடங்கிய மொத்தம் 15 அபராதங்களை, ஐந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு வெளியிட்டது.

டிஜி தொலைத்தொடர்புக்கு மொத்தமாக 5 அபராதங்கள் (250,000 ரிங்கிட்), மேக்சிஸ் பிராட்பேண்ட் மொத்தம் நான்கு (200,000 ரிங்கிட்) மற்றும் யூ மொபைல் மூன்று மொத்த (150,000 ரிங்கிட்) அபராதங்களைப் பெற்றன.

டியூன் டாக் இரண்டு அபராதங்களுக்கு (150,000 ரிங்கிட்) பெற்றது. மற்றும் வைடிஎல் கம்யூனிகேஷன்ஸ் 50,000 ரிங்கிட்டைப் பெற்றது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் பகாங், கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் நடத்தப்பட்ட தணிக்கைகளின் அடிப்படையில் இந்த அபராதங்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு இதுவரையிலும் 3.45 மில்லியன் ரிங்கிட் அடங்கிய மொத்தம் 70 அபராதங்கள் வெளியிட்டுள்ளதாக எம்சிஎம்சி தெரிவித்துள்ளது. இது, கடந்த ஆண்டை விட 16 விழுக்காடு அதிகமாகும். கடந்தாண்டு 58 அபராதங்கள் (2.9 மில்லியன்) ரிங்கிட் வழங்கப்பட்டன.

இயங்கலை மோசடிகள் மற்றும் மோசடி தொடர்பான பிற வழக்குகள் அதிகரித்து வருவதால் பயனீட்டாளரைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பயனர் தகவல்களைச் சரிபார்க்கும் செயல்முறையை மேற்கொள்ளாமல் முன்கட்டண சிம் அட்டைகளை பதிவு செய்வது 1998-ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கு 100,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனை அல்லது இராண்டுமே விதிக்கப்படலாம்.