கோலாலம்பூர்: பேராக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெடுக்கடி தீர்ந்துவிட்டதாக முன்னாள் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமு தெரிவித்தார். தேசிய கூட்டணி கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சாத்துவுடன், அம்னோ ஒத்துழைப்பதாக அவர் தெரிவித்தார்.
முன்னதாக, பேராக் அரசியல் நிலைமை குறித்து விவாதிக்க பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின், அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பாஸ் கட்சியைச் அப்துல் ஹாடி அவாங் ஆகியோர் இன்று கோலாலம்பூரில் ஒரு சந்திப்புக் கூட்டத்தை நடத்துவார்கள் எனக் கூறப்பட்டது.
அம்னோவைச் சேர்ந்த முகமட் சுமாலி ரிட்சுவான் மற்றும் பேராக் பாஸ் தலைவர் ரஸ்மான் சகாரியா மலேசியாகினியிடம் இதனை உறுதிப்படுத்தினர்.
இருப்பினும், மாநில மந்திர் பெசார் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான கூட்டமாக என்பதை விரிவான தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.
சந்திப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறும் என்று சுமாலி கூறியிருந்தார். தம்மிடம் முழுமையான தகவல்கள் இல்லை என்று ரஸ்மான் கூறினார்.
“ஆம், மூன்று தலைவர்கள் (பாஸ், அம்னோ மற்றும் பெர்சாத்து) கோலாலம்பூரில் சந்திப்புக் கூட்டத்தை நடத்துவார்கள் என்று எங்களுக்கு கிடைத்த தகவல் இதுதான்,” என்று அவர் கூறினார்.
இன்று காலை நிலவரப்படி, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவின் சுல்தானை சந்திக்கும் உத்தரவை தனது கட்சி அதிகாரப்பூர்வமாக பெறவில்லை என்றும், பாஸ் கட்சியின் மத்திய உத்தரவுக்காக இன்னும் காத்திருப்பதாகவும் ரஸ்மான் கூறினார்.