ஹைதரபாத்: ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் கடந்த 6- ஆம் தேதி முதல் பலர் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வாந்தி, வலிப்பு நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டுள்ள நிலையில், இப்போது, விசித்திர கூச்சலும் எழுப்புவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து மருத்துவர்கள் குழு இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். தற்போதைக்கு பாதிக்கப்படவர்களுன் எண்ணிகை 600-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில் எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என்று தகவல் வெளியானது. இருப்பினும் அது உறுதிப்படுத்தப் படவில்லை. சிறப்பு மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்த மாதிரிகளைச் சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு எலுருவில் ஆய்வு செய்து வரும் நிலையில், எலுரு மக்கள் அருந்திய நீர் கிருமிகளால் மாசுபட்டிருக்கலாம் என்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் ஏதேனும் கலந்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.