
இந்த விவகாரத்தை தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா, தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவ்வறிக்கையில், பாஸ் கட்சி பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான், பெர்சாத்து பொதுச் செயலாளர் சைனுடின் ஹாம்சா மற்றும் அனுவார் மூசா ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்த முடிவை அடுத்து பேராக்கில் நீடித்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது.