Home One Line P1 அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்!- பெஜுவாங் இளைஞர் பிரிவு

அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்!- பெஜுவாங் இளைஞர் பிரிவு

475
0
SHARE
Ad
படம்: பெஜுவாங் கட்சி இளைஞர் தலைவர் அபு ஹபீஸ் சல்லே ஹுடின்

கோலாலம்பூர்: பெஜுவாங் கட்சியின் இளைஞர் தலைவர் அபு ஹபீஸ் சல்லே ஹுடின் மீண்டும் ஒன்றுபட்ட எதிர்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான அழைப்பை ஆதரித்துள்ளார்.

15-வது பொதுத் தேர்தலுக்கு புதிய மற்றும் ஒன்றுபட்ட எதிர்க்கட்சியை உருவாக்க, குறிக்கோளுடன் அனைத்து எதிர்க்கட்சிகளும் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும் என்று அமானா மற்றும் ஜசெக இளைஞர் தலைவர்கள் வலியுறுத்தியதை அவர் குறிப்பிட்டார்.

கட்சி தலைவர்கள் எடுத்த நிலைப்பாட்டிற்கும், பிளவு காரணமாக எதிர்க்கட்சி தனது உண்மையான பலத்தைக் காட்டத் தவறிவிடுகிறது என்ரு அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“எனவே, 15- வது பொதுத் தேர்தலில் எதிக்கட்சிகள் ஒன்றிணைந்த ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான முயற்சிகளை ஆதரிக்க பெஜுவாங் இளைஞர் பிரிவு தயாராக உள்ளது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரதமர் பெரும்பான்மை ஆதரவை இழந்துவிட்டதாகக் கூறப்பட்ட போதிலும், மொகிதின் யாசினின் வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் தவறியதற்கு மத்தியில் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஒன்றுபட்ட எதிர்க்கட்சிக்கு பேச்சுவார்த்தை நடத்த புதிய முகங்கள் தேவை என்று அபு ஹபீஸ் கூறினார்.

“அனைத்து கட்சிகளிலிருந்தும் மூத்த தலைவர்கள் ஆலோசகர்களாக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.