Home One Line P1 பேராக் மந்திரி பெசாரை நீக்கியதற்காக சாஹிட் ஹமிடி மன்னிப்பு!

பேராக் மந்திரி பெசாரை நீக்கியதற்காக சாஹிட் ஹமிடி மன்னிப்பு!

535
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வெள்ளிக்கிழமை பெர்சாத்துவின் அகமட் பைசால் அசுமுவை மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கியதைத் தொடர்ந்து தேசிய முன்னணி தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி பேராக் தேசிய முன்னணி சார்பாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தேசிய முன்னணி , பாஸ், மற்றும் பெர்சாத்து பேராக் அம்னோ தலைவர் சரணி முகமட்டை மாநிலத்தின் புதிய மந்திரி பெசராக ஆதரிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

சாஹிட், பெர்சாத்து தலைவர் மொகதின் யாசின், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மற்றும் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அனுவார் மூசா, பாஸ் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹாசன் மற்றும் பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா ஜைனுடின் இடையே இன்று நடந்த சந்திப்பின் போது மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், பைசால் அசுமுவுக்கு எதிராக 48 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவருக்கு ஆதரவாக 10 பேர் மட்டுமே ஆதரவு வழங்கினர். அதனை அடுத்து, தாம் பெரும்பான்மையை இழந்து விட்டதாகக் கூறி அசுமு மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.

புதிய மந்திரி பெசாரை தேர்வு செய்யும் பொருட்டு கடந்த மூன்று நாட்களாக, எதிர்க்கட்சிகள் உட்பட பல முறை பேச்சுவார்த்தைகள்  நடந்தன. ஆயினும், இறுதியில், தேசிய கூட்டணியே மீண்டும் பேராக் மாநிலத்தை ஆட்சி செய்ய இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.