Home One Line P1 மலேசியாகினியை ஆதாரமாகக் கொள்ளாதீர்கள், மலேசியர்கள் முரண்படுவீர்கள்!

மலேசியாகினியை ஆதாரமாகக் கொள்ளாதீர்கள், மலேசியர்கள் முரண்படுவீர்கள்!

555
0
SHARE
Ad

அலோர் ஸ்டார்: கோயில் இடிப்பு பிரச்சனை தொடர்பாக மஇகா மற்றும் ஜசெக தலைவர்களுக்கு தாம் கூறிய கருத்து வேறு விதமாக பதிவிடப்பட்டது என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்தார்.

சனுசியின் கூற்று, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடமிருந்து, இனரீதியான கருத்துகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டி, மதத் தலைவர்களையும் கோபப்படுத்தியது.

நேற்று ஓர் ஊடக சந்திப்பில் பேசிய சனுசி, மலேசியாகினி மற்றும் இப்போது செயல்படாத மலேசிய இன்சைடர் போன்ற ஊடக இணையதளங்களை படிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

“நீங்கள் மலேசியாகினியைப் படித்தால், மலேசியர்கள் ஒருவருக்கொருவர் முரண்படுவார்கள். மலேசியாகினியை ஆதாரமாக குறிப்பிட வேண்டாம். மலேசியாகினி நிருபர் இங்கே இருந்தால், தயவுசெய்து மனந்திருந்துங்கள். மலேசியாகினி, மலேசிய இன்சைடர் செய்திகளை தவறாக பதிவிடுகின்றன,” என்று சனுசி கூறினார்.

ஒருவரின் நலன்களுக்காக செய்திகளை வெளியிடுவது பாவமானது என்றும் அவர் கூறினார்.

அண்மையில், தமது முகநூல் அறிக்கையில், மஇகா, ஜசெக, தலைவர்கள் “ஒரு பாட்டில் குடித்து விட்டு , இரண்டு, மூன்று பாட்டில்கள் குடித்தது போல பேச வேண்டாம்” என்று அவர் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.