Home One Line P2 பிரிட்டனில் முதல் முறையாக கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது

பிரிட்டனில் முதல் முறையாக கொவிட்-19 தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது

746
0
SHARE
Ad

பிரிட்டன்: பிபைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொவிட் -19 தடுப்பு மருந்து செவ்வாயன்று, பிரிட்டன் உலகின் முதல் நாடாக 90 வயதிற்கு உட்பட்டவருக்கு செலுத்தியது.

ஆரம்பக் கட்டத்திற்கு 50 மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்து கிடைக்கும்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

80 வயதிற்கு மேற்பட்டவர்கள், முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் சமூக நலன் ஊழியர்களுக்கு தடுப்பு மருந்து செலுத்துவதற்கு நாட்டின் தேசிய சுகாதார சேவை முன்னுரிமை அளித்து வருகிறது.

#TamilSchoolmychoice

மூன்று வார இடைவெளியில் நோய்த்தடுப்பு மருந்து இரண்டு முறை கொடுக்கப்படுகிறது. சோதனையில் பக்க விளைவுகள் பெரும்பாலும் மிதமானவையாக இருந்துள்ள மற்றும் அவை விரைவாக காணாமல் போய் விடுவதாக பிபைசர் கூறியுள்ளது.

இரண்டாவது முறை செலுத்தப்படும் போது, மிகவும் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. 3.8 விழுக்காட்டினர் சோர்வு மற்றும் 2 விழுக்காட்டினருக்கு தலைவலி ஏற்படுகிறது. வயதான பெரியவர்கள் குறைவான, இலேசான பாதகமான நிகழ்வுகளைப் புகாரளித்துள்ளனர்.

இரண்டாவது மருந்து செலுத்தப்பட்ட ஏழு நாட்களுக்குப் பிறகு கொவிட் -19 நோயை தடுப்பு மருந்து தடுக்கிறது.