Home One Line P2 ராகா வானொலியின் சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகா வானொலியின் சிறப்பு நிகழ்ச்சிகள்

798
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தொடங்கி ராகா வானொலியின் சிறப்பு நிகழ்ச்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:

திங்கள், 14 டிசம்பர்

அழையா விருந்தினரை நீங்கள் சந்தித்தால் என்ன செய்வீர்கள்?

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

அழையா விருந்தினரைச் சந்தித்தால் இரசிகர்கள் என்ன செய்வார்கள் என்பதை கலக்கல் காலை குழுவினருடன் தொடர்புக் கொண்டுப் பகிர்ந்துக் கொள்ளலாம்.

புதன், 16 டிசம்பர்

நேர்காணல்: Eurasian Spelling Bee 2020-போட்டியின் வெள்ளி விருது வெற்றியாளருடன் ஒரு நாள்

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: ஆர்யா யோகராஜன், வெள்ளி விருது வெற்றியாளர், Eurasian Spelling Bee 2020 போட்டி

தனது சுவாரசியமானப் பயணம் மற்றும் மறக்கமுடியாத அனுபவங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் English Language Proficiency Competition (ELPC) International Ltd நடத்திய Eurasian Spelling Bee 2020-போட்டியின் வெள்ளி விருது வெற்றியாளர்,  ஆர்யா யோகராஜனின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

வியாழன், 17 டிசம்பர்

நேர்காணல்: தொற்று காலங்களில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு நிறுவனங்களின் நிலை ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: எல்விஸ் சேனன் @ எல்விஸ் டிஜேநாட்டி

தொற்று காலங்களில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு நிறுவனங்களின் நிலையைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் எல்விஸ் டிஜேநாட்டி என்று அழைக்கப்படும் எல்விஸ் சேனனின் நேர்காணலை ரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

வெள்ளி, 18 டிசம்பர்

நேர்காணல்: ராகாவின் மலேசிய நட்சத்திரத்துடன் ஒரு நாள்

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: யுவராஜ் கிருஷ்ணசாமி, நடிகர்

உள்ளூர் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் யுவராஜ் கிருஷ்ணசாமியின் நேர்காணலை ரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை