Home One Line P2 அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு இரத்து- 8 பேருக்கு கொவிட்-19 தொற்று

அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்பு இரத்து- 8 பேருக்கு கொவிட்-19 தொற்று

531
0
SHARE
Ad

சென்னை: ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அப்படப்பிடிப்பில் பங்குக் கொண்ட 8 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்ஸ் சிட்டியில் நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.