Astro Ceria, Xiao Tai Yang, வானவில், Cartoon Network மற்றும் Nickelodeon மற்றும் ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன்டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீமிங்) செய்யக் கிடைக்கப்பெறும் 10,000-க்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்ட சிறந்த நிகழ்ச்சிகளுடன் சிறப்பானப் பள்ளி விடுமுறைக் காலமாக இது அமையும்!
பள்ளி விடுமுறைகளை முன்னிட்டு, குழந்தைகளுக்கான அற்புதமான நிகழ்ச்சிகளுடன் ஆஸ்ட்ரோ தயாராக உள்ளது!
நாங்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஆஸ்ட்ரோவின் குழந்தைகளின் தொகுப்பின் புதிய உறுப்பினர்களான Boomerang (அலைவரிசை 619) மற்றும் Nick Jr. (அலைவரிசை 617) ஆகிய இரு அலைவரிசைகளில் பிரத்தியேக உள்ளடக்கங்களை கண்டு மகிழுங்கள்!
We Bare Bears, SpongeBob SquarePants, Beyblade, Upin & Ipin, Ejen Ali, Adventure Time, The Amazing World of Gumball, Ben 10, Peppa Pig, Lego Friends, Teenage Mutant Ninja Turtles, Bandanamu Kids Songs, Molang, Oddbods, Thomas & Friends, SMK, Omar & Hana, Didi & Friends, The Five Elves, Happy Little Submarines, மோட்டு பட்லு, பாகுபலி, என பல அற்புதமான நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் கிடைக்கப்பெறும் 10,000-க்கும் மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டத் தரமானக் குழந்தைகளுக்கானப் பொழுதுபோக்கு மற்றும் கல்விச் சார்ந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எங்கள் கைவசம் உள்ளன.
உலகம் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வேளையில், அந்தந்தப் பகுதிகளில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க எண்ணும் பெற்றோரின் குறிக்கோளை ஆஸ்ட்ரோ புரிந்துக்கொள்கிறது.
மலேசியாவின் முதல் தர குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அலைவரிசையான Astro Ceria (எச்டி அலைவரிசை 611 மற்றும் எஸ்டி அலைவரிசை 631), லயன் சோங் மற்றும் அலிஃப் இடாம் போன்ற புதிய இளம் திறமைகள் இடம்பெற்றுள்ளப் புதிய கல்விச் சார்ந்தப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியான, Geng Gajet போன்ற பல்வேறு சிறந்த உள்ளடக்கங்களை அறிமுகப்படுத்துகிறது.
மேலும், Didi & Friends, Robozeta மற்றும் SMK Animasi போன்ற சிறந்த உள்ளூர் அனிமேஷன்களையும் கண்டு மகிழ்வர். புத்தாண்டு அன்று ஜனவரி 1-ஆம் தேதி இரவு 9 மணிக்கு Astro Ceria-வில் பிரத்தியேகமாக ஒளிபரப்புக் காணவுள்ள How To Train Your Dragon 2 நிகழ்ச்சியைக் கண்டுக் களிக்கலாம்!
ஜனவரி 3-ஆம் தேதி முதல், ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், கலரி கிட்ஸ் நிகழ்ச்சியைக் காலை 9.30 மணிக்கும் சோட்டா பீம்: குங்ஃபு தமகா நிகழ்ச்சியைக் காலை 10.40 மணிக்கும் கண்டு களிக்கலாம்!
மேலே குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன்டிமாண்டில் (பதிவிறக்கம்) ஸ்ட்ரீம் செய்து மகிழலாம்.
We Bare Bears (மாலை 4 மணிக்கு) மற்றும் The Amazing World of Gumball (இரவு 9 மணிக்கு) திங்கள் முதல் வெள்ளி வரை Cartoon Network (எச்டி அலைவரிசை 615 மற்றும் எஸ்டி அலைவரிசை 635)-இல் கண்டுக் களியுங்கள்!
அதுமட்டுமின்றி, Adventure Time எனும் பிரபலமான அனிமேஷன் தொடரையும் தினமும் இரவு 10 மணிக்கு கண்டு மகிழுங்கள்! Nickelodeon (எச்டி அலைவரிசை 616 மற்றும் எஸ்டி அலைவரிசை 636)-இன் ரசிகர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை, SpongeBob SquarePants-ஐ மாலை 3 மணிக்கும் மற்றும் Avatar: The Last Airbender-ஐ மாலை 4 மணிக்கும் கண்டு மகிழலாம்.
சில வார இறுதி பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு, ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதியம் 12.30 மணிக்கு Lego Friends-ஐ கண்டு மகிழலாம். டிசம்பர் 31, 2020-இல் முடக்கத்திற்கு முன்பு, Beyblade நிகழ்ச்சியின் இரசிகர்கள் பிரத்தியேகமாக, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு Beyblade Burst Turbo நிகழ்ச்சியை Disney XD (எச்டி அலைவரிசை 612)-இல் கண்டுக் களிக்கும் இறுதி வாய்ப்பைப் பெறலாம்.