நாடு முழுவது குடியரசுதின விழா கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் குடியரசுதின விழாவை ஒட்டி அணிவகுப்பு மரியாதை நடைபெறுகின்றது.
இந்த அணிவகுப்பில் அரசின் திட்டங்களை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகள் இடம் பெறுகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும், ஆடல்பாடல் நிகழ்ச்சிகளும் பேரணியில் இடம் பெறுகின்றன.
குடியரசுதின அணிவகுப்பை பொதுமக்கள் கண்டுகளிப்பதற்கு வசதியாக மெரினா கடற்கரை சாலையில் இருபுறமும் மூங்கில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
Comments