டாவோஸ்,ஜன.26-வெளிநாட்டு நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் 550 கோடி வெள்ளியை மலேசியாவில் முதலீடு செய்யவுள்ளன என்றும், நாளை தொடங்கவுள்ள ஐந்து நாள் உலக பொருளாதார மாநாட்டிற்கு இடையே சம்பந்தப்பட்ட அந்நிறுவனங்களுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து அந்நிறுவனங்கள் முதலீட்டிற்காக உத்தரவாதத்தை வழங்கியுள்ளன.
பெட்ரோனாஸ் எண்ணெய் நிறுவனத்துடன் இட்டாச்சு ஸ்டீல் நிறுவனம் கூட்டாக இணைந்து செயலாற்ற ஆர்வம் கொண்டுள்ளது.எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் துறைக்கு விளிம்பில்லா குழாய்கள் செய்வதை மேற்கொள்ளும்.இது கொள்கை ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஆய்வுக்கு பின் அடுத்தாண்டில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்