Home நாடு ஆயுர்வேத துறையில் 20 மலேசிய மாணவர்களுக்கு வாய்ப்பு

ஆயுர்வேத துறையில் 20 மலேசிய மாணவர்களுக்கு வாய்ப்பு

641
0
SHARE
Ad

india-embassyகோலாலம்பூர் ஏப்ரல் 17-  2013 மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான பாரம்பரிய ஆயுர்வேதத் துறையில்  இந்தியாவில் தங்கள் உயர்கல்வியை தொடரவிரும்பும்  20 மலேசிய மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் கல்வி உபகார சம்பளம்  வழங்க முன் வந்துள்ளது.

இத்துறையில் தங்களின் கல்வியைத் தொடர விரும்பும் மலேசிய மாணவர்கள் இக்கல்வி உபகாரச் சம்பளத்திற்கு  விண்ணப்பிக்க அழைக்கப்படுகின்றனர்.

இந்த உபகாரச்  சம்பளத்திற்கான  விண்ணப்ப இறுதிநாள்  மார்ச் 30ஆம் தேதி என்ற நிலையில், தற்போது அதற்கான  காலக்கெடுவை இம்மாதம் 30ஆம் தேதி வரை  நீடித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ஆகவே, ஆயுர்வேத  துறையில் ஆர்வமுள்ள மலேசிய மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்க வரவேற்கப்படுகின்றனர்.

மேல் விவரங்களுக்கு, இந்திய தூதரகம் 03-62052350 என்ற எண்களின் வழியும் தொலைநகல்  03-61431192  எண்களின் வழியும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், edu@indianhighcommission.com.my என்ற இணைய அகப்பக்கத்தின் வழியும் தொடர்பு கொள்ளலாம்.

http://indianhighcommission.com.my/pdf/ ICCR_Scholarship_Application_Form.pdf என்ற இணையம் வாயிலாக விண்ணப்ப பாரங்களை பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.

கீழ்காணும் முகவரியில் இந்திய தூதரகத்திற்கு நேரடியாக வருகை தந்து விண்ணப்பபாரத்தை சமர்ப்பிக்கலாம்.

Education Wing, High Commission of India,

Menara 1 Mont Kiara, Level 28,

No.1 Jalan Kiara, Mont Kiara,

50480 Kuala Lumpur