Home One Line P2 ஆஸ்ட்ரோ : தமிழ்ப் புத்தாண்டுக்கு அதிகமான தமிழ் நிகழ்ச்சிகள்!

ஆஸ்ட்ரோ : தமிழ்ப் புத்தாண்டுக்கு அதிகமான தமிழ் நிகழ்ச்சிகள்!

614
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிறக்கின்ற 2021-ஆம் புத்தாண்டில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் அதிகமான தமிழ் நிகழ்ச்சிகள் முதல் ஒளிபரப்பாக ஒளிபரப்பாகவிருக்கின்றன.

உள்ளூர் புத்தாண்டு இசை நிகழ்ச்சி, கமல் ஹாசன் பாப்-அப் அலைவரிசை மற்றும் உள்ளூர் தொடர்களைக் கண்டு மகிழுங்கள்.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் உள்ளூர் மற்றும் அனைத்துலக முதல் ஒளிபரப்புத் தமிழ் நிகழ்ச்சிகளுடன் எதிர்வரும் புத்தாண்டைக் கொண்டாடலாம்.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரத் துணைத் தலைவர் மார்க் லூர்ட்ஸ் இது குறித்துக் கூறுகையில், “எதிர்வரும் புத்தாண்டை எங்கள் வாடிக்கையாளர்களுடன் கொண்டாடுவதை நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். மேலும், புதிய உயர் தர உள்ளூர் மற்றும் சர்வதேச பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அவர்கள் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறோம். புகழ் பெற்ற உள்ளூர் கலைஞர்களைக் கொண்டப் புத்தாண்டு இசை நிகழ்ச்சியிலிருந்து, ஒரு புதிய உள்ளூர் நகைச்சுவைத் திகில் தொடர் மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான கமல் ஹாசனின் பிரபலமானத் திரைப்படங்களைக் கொண்டப் புதிய பாப்-அப் அலைவரிசை (pop-up channel) வரை, நாங்கள் தொடர்ந்து எங்கள் வாடிக்கையாளர்களுக்குப் புதிய மற்றும் சிறந்த உள்ளடக்கத் தேர்வுகளை வழங்கி வருகிறோம். நாங்கள் ஒரு சிறப்பான ஆண்டை எதிர்ப்பார்ப்பதோடு எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் இவ்வேளையில் எங்களின் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.

புத்தாண்டைச் செவ்வெனவேத் தொடங்கும் வகையில், அனைத்து வாடிக்கையாளர்களும் 2021 ஜனவரி 1 முதல் 31 வரை, கமல் ஹாசன் (அலைவரிசை 242) என்ற புதிய பாப்-அப் (pop-up channel) அலைவரிசையில் 16 வயதினிலே, மூன்றாம் பிறை, குணா, அவ்வை சண்முகி, ஹே ராம், அன்பே சிவம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்., தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன், விஸ்வரூபம் 1 & 2, பாபநாசம் என கமல் ஹாசனின் புகழ்ப்பெற்ற 70 திரைப்படங்களைக் கண்டு இரசிக்கலாம். கமல் ஹாசன் நடித்தத் திரைப்படங்களிலிருந்துப் பிரபலமானப் பாடல்கள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளையும் கமல் ஹாசன் (அலைவரிசை 242)-இல் வாடிக்கையாளர்கள் கண்டுக் களிக்கலாம்.

புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் வகையில், யோகி பி, ரேபிட் மேக், எம்ஸி ஜேஸ், ஹேவோக் பிரதர்ஸ், சந்தேஷ், சித்தார்த் மற்றும் பல பிரபலமான உள்ளூர் கலைஞர்களின் அற்புதமானப் படைப்புகள் இடம்பெறும் “தெறிக்க விடலாமா” எனும் மூன்று மணி நேர உள்ளூர் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம். சமீபத்திய தீபாவளிச் சிறப்பு நிகழ்ச்சிகளான “அன்புக்கு நான் அடிமை” மற்றும் “தீபாவளி பொக்கிஷம்” ஆகியவற்றை இயக்கிய பிரபலத் திரைப்பட இயக்குநர், தேவ் ராஜா இத்துடிப்பான உள்ளூர் இசை நிகழ்ச்சியை இயக்கியுள்ளார். ஜனவரி 1, இரவு 9 மணிக்கு, தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) “தெறிக்க விடலாமா” உள்ளூர் இசை நிகழ்ச்சி முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

வேற வழி இல்ல, ரைஸ்: இனி கலிலா (Rise: Ini Kalilah) மற்றும் இருள் கோஸ்ட் ஹோட்டல் (Irul Ghost Hotel) புகழ் எம்.எஸ். பிரேம் நாத் இயக்கிய சீரியல் பேய் எனும் நகைச்சுவைத் திகில் தொடரை அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் கண்டு மகிழலாம். இந்த 20 அத்தியாயங்களைக் கொண்டச் சுவாரஸ்சியமானத் தொடர், ‘புன்னகைப் பூ’ கீதா, ஜேம்ஸ் தேவன், சசி குமார், கவிமாறன், ரேவதி, நவீஷா, அக்ஷ்ரா நாயர், கோகுலன், சுரேஷ் மற்றும் ராஜ் கணேஷ் உள்ளிட்ட பிரபலமான ராகா அறிவிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் திறமைகளைத் தாங்கி மலர்கின்றது. ஜனவரி 4, இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிபரப்புக் காணும் சீரியல் பேய் தொடரை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம்.

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.