Home One Line P1 பினாங்கு பெர்ரி சேவை – 126 வருடங்களுக்குப் பின் விடைபெற்றது

பினாங்கு பெர்ரி சேவை – 126 வருடங்களுக்குப் பின் விடைபெற்றது

1110
0
SHARE
Ad
ஜோர்ஜ் டவுன் : பினாங்கின் அடையாளங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப் பயணிகளை பினாங்குக்கு ஈர்த்த அம்சங்களில் ஒன்றாகவும் திகழ்ந்த பினாங்கு பெர்ரி சேவை இன்று டிசம்பர் 31-ஆம் தேதியுடன் தனது சேவைகளை நிறுத்திக் கொண்டது.
பினாங்கு மாநிலத்தின் பல்வேறு தரப்புகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருந்த நிலையில் மத்திய அரசாங்கம் விடாப்பிடியாக இந்த பெர்ரி சேவையை நிறுத்தி விட்டது.
இன்று இறுதிப் பயணத்தின்போது பெர்ரி சேவைக்கு விடை தரும் வகையிலும், மீண்டும் இந்த பெர்ரி சேவையைக் கொண்டு வருவோம் என்ற வாக்குறுதியைப் பினாங்கு மக்களுக்கு வழங்கும் விதத்திலும் பினாங்கு மாநில முன்னாள் முதல்வர் லிம் குவான் எங், பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி.இராமசாமி ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர் இன்று பினாங்கு பெர்ரி சேவை முகப்பிடத்திற்கு வருகை தந்தனர்.
பின்னர் பினாங்கு துணை முதல்வர் இராமசாமியும் அவரது குழுவினரும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விரைவு படகுச் சேவையைப் பயன்படுத்தினர்.
அந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்: