Home One Line P1 கொவிட்-19: அனைத்துலக வல்லுநர்களை அனுமதிக்க சீனா மறுப்பு- உலக சுகாதார நிறுவனம் வருத்தம்

கொவிட்-19: அனைத்துலக வல்லுநர்களை அனுமதிக்க சீனா மறுப்பு- உலக சுகாதார நிறுவனம் வருத்தம்

505
0
SHARE
Ad

ஜெனீவா: கொவிட்-19 தொற்றின் தோற்றம் குறித்து ஆராய அனைத்துலக வல்லுநர்கள் குழு தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு சீனா இன்னும் அங்கீகாரம் வழங்காததைக் குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் செவ்வாயன்று, தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறினார்.

கொவிட்-19 தொற்றின் ஆரம்பகால சம்பவங்களை விசாரிப்பதற்கான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பணியின் ஒரு பகுதியாக, 10 பேர் கொண்ட குழு ஜனவரி தொடக்கத்தில் புறப்படவிருந்தது. இந்த நோய் முதன் முதலாக சீனா வூஹானில் கண்டறியப்பட்டது.

ஜெனீவாவில் நடந்த இயங்கலை செய்தி மாநாட்டில் பேசிய உலக சுகாதார நிறுவன இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், சீனாவில், வல்லுநர்களின் வருகைக்கு தேவையான அனுமதிகளை சீன அதிகாரிகள் இன்னும் இறுதி செய்யவில்லை என்பதை இன்று தாங்கள் அறிந்ததாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“நான் சீன மூத்த அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளேன். இந்த பணி உலக சுகாதார அமைப்பிற்கு முன்னுரிமை என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

அனைத்துலக அணியின் இரண்டு உறுப்பினர்கள் ஏற்கனவே சீனாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தனர். ஒருவர் இப்போது திரும்பி வந்துள்ளார் என்று அவசரநிலை தலைவர் மைக் ரியான் கூறினார்.

“இது ஒரு தளவாட மற்றும் அதிகாரத்துவ பிரச்சனை என்று நாங்கள் நம்புகிறோம். அது மிக விரைவாக தீர்க்கப்பட முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உட்பட சிலர், தொற்று ஏற்பட்ட காலத்தில் பெய்ஜிங்கின் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பிய போதிலும், 2019- ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளிவந்த ஆரம்ப சம்பவங்களை கையாள்வது குறித்த விமர்சனங்களை சீனா நிராகரித்தது.

உலக சுகாதார நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கான திட்டங்களை அறிவித்த வாஷிங்டன், வெளிப்படையான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.