Home One Line P2 ஆஸ்ட்ரோ : கட்டாயம் பார்க்க வேண்டிய 10 கமல்ஹாசன் திரைப்படங்கள்

ஆஸ்ட்ரோ : கட்டாயம் பார்க்க வேண்டிய 10 கமல்ஹாசன் திரைப்படங்கள்

85
0
SHARE

கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் புகழ்பெற்ற நடிகர், கமல் ஹாசன் நடித்த எழுபது விரும்பத்தக்க திரைப்படங்களையும், கமல் ஹாசன் நடித்தத் திரைப்படங்களிலிருந்துப் பிரபலமானப் பாடல்கள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளையும் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வாயிலாக புதிய பாப்-அப் அலைவரிசையான கமல் ஹாசன் (அலைவரிசை 242)-இல், ஜனவரி மாதம் முழுவதும் கண்டு மகிழலாம்.

கமல் ஹாசன் (அலைவரிசை 242)-இல் இரசிகர்கள் பார்த்து மகிழக்கூடியப் பத்துக் கமலின் திரைப்படங்கள் பின்வருமாறு:

பாபநாசம் (ஆன் டிமாண்ட் வாயிலாக இப்போதே பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்)

நடிகர்கள்: கமல் ஹாசன், கௌதமி & ஆஷா ஷரத்

பள்ளிப் படிப்பை முழுமையாகப் பெறாத சுயம்புலிங்கம், திரைப்படங்களைப் பார்த்துத் தனது அறிவை வளர்த்துக் கொண்ட ஒரு புத்திசாலி. ஒரு தீய சம்பவம் அவரது குடும்பத்தை அழிக்க நேரிடுகையில், தனது குடும்பத்தைப் பாதுகாக்க அனைத்து யுத்திகளையும் பயன்படுத்துகிறார்.

அன்பே சிவம் (ஆன் டிமாண்ட் வாயிலாக இப்போதே பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்)

நடிகர்கள்: கமல் ஹாசன், ஆர். மாதவன், கிரண் ரத்தோட் & உமா ரியாஸ் கான்

விளம்பரத் தயாரிப்பாளரான அன்பரசு, புவனேஷ்வருக்கு ஒரு வணிகப் பயணத்தை மேற்கொள்கிறார். அங்கு பலத்த மழை காரணமாக விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கிறார். சக பயணியான நல்லசிவத்தை சந்தித்து அவருடன் நட்பு கொள்ளும்போது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது.

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். (ஆன் டிமாண்ட் வாயிலாக இப்போதே பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்)

நடிகர்கள்: கமல் ஹாசன், சினேகா, பிரபு & பிரகாஷ் ராஜ்

ராஜராமன் எனும் ஒரு குண்டர் தனது தந்தையின் கனவை நிறைவேற்ற மருத்துவக் கல்லூரியில் சேருகிறார். அவர் கல்லூரி விதிகளை மீறி பிரச்சினைகளை உருவாக்குகிறார்.

16 வயதினிலே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)| 4 ஜனவரி, இரவு 9 மணி

நடிகர்கள்: கமல் ஹாசன், ஸ்ரீ தேவி & ரஜினி காந்த்

பதினாறு வயதான மயில், நகரத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவரைக் காதலிக்கிறாள். அவரது தேவைகளுக்கு இணங்காததால் அம்மருத்துவர் மயிலை விட்டு பிரிகிறார். அப்போது, சப்பாணி அவள் மீது அக்கறை எடுத்துக் கொள்கிறார்.

மூன்றாம் பிறை (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)| 5 ஜனவரி, இரவு 9 மணி

நடிகர்கள்: கமல் ஹாசன், ஸ்ரீ தேவி & சில்க் ஸ்மிதா

கார் விபத்து காரணமாக தலையில் பலத்தக் காயம் ஏற்பட்ட ஒரு இளம் பெண் ஒரு விபச்சார விடுதியில் சிக்கிக் கொள்ளவே அவள்பால் காதல் வயப்படும் ஒரு பள்ளி ஆசிரியர் அவளை மீட்கிறார்.

ஹே ராம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)| 14 ஜனவரி,  இரவு 9 மணி

நடிகர்கள்: கமல் ஹாசன் & ஷாருக் கான்

கல்கத்தாவில் நடந்த கலவரத்தின்போது சகீத் ராமின் மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படுகிறார். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மகாத்மா காந்தியே பொறுப்பு என்று அவர் உறுதியாக நம்புகையில், அவரைக் கொலை செய்ய முற்படுகிறார்.

குணா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)| 19 ஜனவரி, இரவு 9 மணி

நடிகர்கள்: கமல் ஹாசன், ரேகா & ரோஷினி

ஒரு நியூரோடைவர்ஜன் (neurodivergent) மாய வித்தை மூலம் தான் வெறுக்கிற குடும்பத்திலிருந்துத் தப்பித்துச் செல்கிறார்.

விஸ்வரூபம் 1 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)| 23 ஜனவரி, இரவு 9 மணி

நடிகர்கள்: கமல் ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார் & ஆண்ட்ரியா

அமெரிக்காவில் படிக்கும் இலட்சியங்களைக் கொண்ட நிருபமா எனும் பெண், விஸ்வநாதன் என்ற நடன மாஸ்டரை மணக்கிறார். அவரது நடத்தைக் குறித்து சந்தேகம் இருப்பதால், அவர் ஒரு துப்பறியும் நபரை நியமிக்கிறார். அத்துப்பறியும் நபர் அவரது கணவரின் உண்மையான அடையாளத்தையும் கடந்தக் காலத்தையும் வெளிப்படுத்துகிறார்.

விஸ்வரூபம் 2 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)| 24 ஜனவரி, இரவு 9 மணி

நடிகர்கள்: கமல் ஹாசன், ராகுல் போஸ், பூஜா குமார் & ஆண்ட்ரியா

RAW முகவரான விசாம் அஹமத் காஷ்மீர், மூன்று நாடுகளுக்கு எதிராக ஒரு கொடிய பணியைச் செயல்படுத்துவதிலிருந்து ஒரு பயங்கரவாத அமைப்பைத் தடுக்கிறார்.

தசாவதாரம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)| 28 ஜனவரி, இரவு 9 மணி

நடிகர்கள்: கமல் ஹாசன், அசின் & மல்லிகா ஷெராவத்

ஒரு பயோவெப்பனின் ஆபத்தை உணர்ந்தப் பிறகு, ஒரு விஞ்ஞானி அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யவும் அதைப் பாதுகாக்கவும் முயற்சி செய்கிறார். அது தற்செயலாக இந்தியாவைச் சென்றடையும் போது, ஒரு சாத்தியப் பேரழிவைத் தடுக்க அவர் போராடுகிறார்.

Comments