Home One Line P2 ராகா வானொலி : ஜனவரி 17 வரையிலான சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகா வானொலி : ஜனவரி 17 வரையிலான சிறப்பு நிகழ்ச்சிகள்

532
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அடுத்த வாரத்தில் ஜனவரி 11 தொடங்கி ஜனவரி 17 வரையில் ராகா வானொலியில் ஒலியேறவிருக்கும் சில சிறப்பு நிகழ்ச்சிகள் :

திங்கள், 11 ஜனவரி

நேர்காணல்: ராகா சாதனையாளர்களைக் கொண்டாடுகிறது

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)  செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

விருந்தினர்: பிரிகேடியர்-ஜெனரல் சூரியகலா சூரியபகவான், இராணுவ அதிகாரி
தனது வெற்றிக் கதைகள் மற்றும் சாதனைப் பயணங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் பிரிகேடியர்-ஜெனரல் சூரியகலா சூரியபகவானின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம். பிரிகேடியர்-ஜெனரல் சூரியகலா சூரியபகவான் தனது இராணுவ சேவையில் இரண்டு நட்சத்திரத் தரவரிசைகளைப் பெற்ற முதல் பெண் இராணுவ அதிகாரியாவார்.

செவ்வாய், 12 ஜனவரி

நேர்காணல்: ராகா சாதனையாளர்களைக் கொண்டாடுகிறது

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்கள்: லெப்டனன்ட் லோஹப்பிரியா மணிசேகரன் & கோப்ரல் கிருஷ்ணமூர்த்தி லெட்சுமணன், அரசு மலேசிய விமானப்படை (ஆர்.எம்.ஏ.எஃப்)
அரசு மலேசிய விமானப்படை அதிகாரிகளாக தங்களது அனுபவம், வெற்றிக் கதைகள், சுவாரசியமானப் பயணம் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் லெப்டனன்ட் லோஹப்பிரியா மணிசேகரன் மற்றும் கோப்ரல் கிருஷ்ணமூர்த்தி லெட்சுமணன் ஆகியோரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம்.

கிள்ளானில் பிறந்த, லெப்டனன்ட் லோஹப்பிரியா மணிசேகரன் மலேசியாவின் முதல் பெண் இந்திய விமானி ஆவார். இவர் மலேசிய ஆயுதப்படைகளின் மூன்று பிரிவுகளான அரச மலேசிய விமானப்படை, இராணுவம் மற்றும் அரச மலேசிய கடற்படை உள்ளிட்டவற்றில் பணியாற்றியவர்.

மறுபுறம், விமானப்படைத் தலைவர் ஜெனரல் டான்ஸ்ரீ அக்பால் அப்துல் சாமாட், ‘Airman of the Year 2020’ எனும் உயரிய விருதை கோப்ரல் கிருஷ்ணமூர்த்தி லெட்சுமனனுக்கு வழங்கினார்.

புதன், 13 ஜனவரி

நேர்காணல்: ராகா சாதனையாளர்களைக் கொண்டாடுகிறது

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: டத்தோ சுதா தேவி கே. ஆர். வாசுதேவன், காமன்வெல்த் அறக்கட்டளையின் தலைவர்

தனது வெற்றிக் கதைகள், அனுபவம், சாதனைகள் மற்றும் காமன்வெல்த் அறக்கட்டளைப் பற்றிய சில தகவல்கள் ஆகியவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் டத்தோ சுதா தேவி கே. ஆர். வாசுதேவனின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம்.

டத்தோ சுதா தேவி கே. ஆர். வாசுதேவன், காமன்வெல்த் அறக்கட்டளையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மலேசியரும், ஆசியாவில் இத்தலைவர் பதவியை வகிக்கும் முதல் நபருமாவார்.

வியாழன், 14 ஜனவரி

ராகாவுடன் பொங்கல்

ராகா | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்)செய்து மகிழுங்கள்

இரசிகர்கள் புதிய இயல்பில், ஜூம் (Zoom) வழியாக ராகாவுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடலாம். ஜூம் இணைப்பு (Zoom link) மற்றும் கொண்டாட்டத்தின் நேரம் விரைவில் ராகாவின் சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிரப்படும்.

அதுமட்டுமின்றி, ஒரு மருத்துவராக தனது பயணத்தைப் பகிர்ந்துக் கொள்ளும் தற்பொழுது அடிலெய்டில் வசிக்கும் மலேசிய மருத்துவரான தர்மினி துரைரத்தினத்தின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம். 2006-ஆம் ஆண்டில் ஒரு மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்ற இவர் அடிலெய்டில் ஒரு புதிய கோவிட்-19 கிளஸ்டரை வெற்றிகரமாகத் தடுத்தப் பின்னர் பிரபலமடைந்தார்.

வெள்ளி, 15 ஜனவரி

நேர்காணல்: ராகா சாதனையாளர்களைக் கொண்டாடுகிறது

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: சிவசங்கரி, அரசு உபகாரச்சம்பளம் பெறுநர்

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா அவர்களிடமிருந்து உயரிய அரசு உபகாரச்சம்பளம் பெற்ற சிவசங்கரியின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம். அவர் தனது வெற்றிக் கதைகள், உத்வேகங்கள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்வார்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை