Home One Line P2 ஆஸ்ட்ரோ : பொங்கல் திருநாளை முன்னிட்டு கூடுதல் சிறப்பு நிகழ்ச்சிகள்

ஆஸ்ட்ரோ : பொங்கல் திருநாளை முன்னிட்டு கூடுதல் சிறப்பு நிகழ்ச்சிகள்

906
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆஸ்ட்ரோவில் மேலும் அதிகமான புதிய முதல் ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை அதன் வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் மேலும் அதிகமான உள்ளூர் மற்றும் அனைத்துலக பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு முதல் ஒளிபரப்புக் காணும் உள்ளூர் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:

#TamilSchoolmychoice

• மனோகரன் சுப்பரமணியம் மற்றும் விடியா லியானா நடிக்கும், எஸ். மதன் இயக்கத்தில் மலர்ந்தக் காதல் நாடக டெலிமூவியான “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்” ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201)-இல் ஜனவரி 14, இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது;

• உள்ளூர் பிரபல ஜோடிகளானச் செயிண்ட் மற்றும் அஞ்சலி, தேவகுரு மற்றும் ரதி விஷாலி, சாஸ்தன், கரிஷ்மா, மற்றும் கேசவன் மற்றும் பாஷினி போன்றோர் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சி, குறும்புப் பொங்கல்.

அஹிலா சண்முகம் மற்றும் இர்பான் ஜய்னி ஆகியோரால் தொகுத்து வழங்கப்படும் இவ்விளையாட்டு நிகழ்ச்சியைப் புகழ்பெற்றத் திரைப்பட இயக்குனர், தேவ் ராஜா இயக்கியுள்ளார். பிரபல விருந்தினர்கள் எவ்வாறு பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர் என்பதை இந்த விளையாட்டு நிகழ்ச்சி சித்தரிக்கின்றது. குறும்புப் பொங்கல் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231)-இல் ஜனவரி 14, இரவு 9.30 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது;


• எஸ். மதன் இயக்கிய – தேவா, ஈஸ்வர் ஜி, டாக்டர் செல்வமுத்து, அண்ணாமலை மற்றும் சுதா ஆகியோர் நடித்த – குற்றவியல் த்ரில்லர் ‘தமனி’ ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201)-இல் ஜனவரி 16, இரவு 9 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

வாடிக்கையாளர்கள் முதல் ஒளிபரப்புக் காணும் பின்வரும் அனைத்துலக நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழலாம்:

• முதல் முறையாக கலைமாமணி திண்டுக்கல் ஐ. லியோனி பங்கேற்கும் சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்ச்சி, ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235)-இல் ஜனவரி 14, மதியம் 12 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது;

• இரண்டு பிரபலமானப் புனைக்கதை நிகழ்ச்சிகளில் இருந்து இரண்டு அணிகளைக் கொண்ட பல்வேறு நிகழ்ச்சியான (variety show) மொய் விருந்து, ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235)-இல் ஜனவரி 14, மதியம் 2 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது;

• விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த அரசியல் நாடகத் திரைப்படம் கா பெ ரணசிங்கம், ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235)-இல் ஜனவரி 14, மாலை 4 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது;

• சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்த அதிரடி நாடகத் திரைப்படம் சூரரைப் போற்று சன் டிவி (எச்டி அலைவரிசை 234 / அலைவரிசை 211)-இல் ஜனவரி 14, மாலை 6.30 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது;

• சந்தானம் மற்றும் தாரா அலிஷா நடித்த நகைச்சுவை நாடகத் திரைப்படம் பிஸ்கோத் ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235)-இல் ஜனவரி 15, மதியம் 12.30 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது;

• புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான கரு பழனியப்பன் மற்றும் பிரபல நடிகையும் தொகுப்பாளினியுமான பிரியா ராமன் பங்கேற்கும் பல்வேறு நிகழ்ச்சியான (variety show) மிஸ்டர். தமிழன் வெர்சஸ் மிஸ்சஸ் தமிழச்சி (Mr. Tamilan vs Mrs. Tamilachi), ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 235)-இல் ஜனவரி 15, மதியம் 3 மணிக்கு முதல் ஒளிபரப்புக் காணுகிறது;

(நிகழ்ச்சிகளின் மேல் விவரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.)