Home One Line P1 முன்னாள் நீதிபதி முகமட் சாலே காலமானார்

முன்னாள் நீதிபதி முகமட் சாலே காலமானார்

499
0
SHARE
Ad

கோலா திரெங்கானு: முன்னாள் தலைமை நீதிபதி துன் டாக்டர் முகமட் சாலே அபாஸ் கொவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதால் தெரிவிக்கப்பட்ட சில நாட்களில் இன்று சனிக்கிழமை (ஜனவரி 16) காலமானார். அவருக்கு 91 வயது.

இது குறித்து அவரது குடும்பத்தினர் வாட்சாப் செய்தியில் தெரிவித்தனர். அதிகாலை 3.20 மணிக்கு அவர் காலமானார்.

வியாழக்கிழமை (ஜனவரி 14) கொவிட் -19 தொற்றுக்கு முகமட் சாலே பரிசோதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார் என்று மருத்துவமனை அறிக்கை கூறியது.

#TamilSchoolmychoice

1984 முதல் 1988 வரை அப்போதைய உச்சநீதிமன்றத்தின் (இப்போது கூட்டரசு நீதிமன்றம்) தலைவராக இருந்தார்.