Home One Line P1 கொவிட்-19: உலகளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவு

கொவிட்-19: உலகளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவு

398
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உலகளாவிய கொவிட்-19 இறப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2 மில்லியனைத் தாண்டியது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் பல தடுப்பு மருந்துகளை வாங்க முனைப்புக் காட்டி வரும் நிலையில் இந்த எண்ணிக்கை உயர்வு ஏற்பட்டுள்ளது.

1 மில்லியன் இறப்புகளை உலகம் பதிவு செய்ய ஒன்பது மாதங்கள் ஆனாதாகவும், ஆனால் 1 மில்லியனிலிருந்து 2 மில்லியனுக்கு உயர மூன்று மாதங்கள் மட்டுமே ஆனதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

2021- ஆம் ஆண்டில், இறப்புகள் ஒரு நாளைக்கு சராசரியாக 11,900- க்கும் அதிகமாகிவிட்டன அல்லது ஒவ்வொரு எட்டு விநாடிகளுக்கும் ஒருவர் உயிர் இழப்பதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.

#TamilSchoolmychoice

“நம் உலகம் இதயத் துடிப்பைத் தூண்டும் எல்லையை எட்டியுள்ளது,” என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அந்தோனியோ தெட்ரோஸ் தெரிவித்தார்.

ஏப்ரல் 1- ஆம் தேதிக்குள், உலக இறப்பு எண்ணிக்கை 2.9 மில்லியனை எட்டக்கூடும் என்று சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனத்தின் கணிப்பு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் மொத்தம் 386,000- க்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டுள்ளன. பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.