Home நாடு தலைமை நீதிபதி பதவியிலிருந்து ரிச்சர்ட் மலாஞ்சும் ஓய்வு!

தலைமை நீதிபதி பதவியிலிருந்து ரிச்சர்ட் மலாஞ்சும் ஓய்வு!

695
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  தலைமை நீதிபதி ரிச்சர்ட் மலாஞ்சும், கடந்த 27 வருடங்களாக நீதிபதியாகப் பணியாற்றி நேற்று வெள்ளிக்கிழமை அப்பொறுப்பிலிருந்து ஓய்வுக் பெற்றார்.

சபா மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதி பதவியில் அமர்ந்த முதல் நபராக மலாஞ்சும் ஏற்கப்படுகிறார்.  கடந்த ஒன்பது மாதங்கள் தலைமை நீதிபதியாகவும், கடந்த 12 ஆண்டுகளாக சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் ஓய்வுப் பெற்ற மலாஞ்சும், மேலும் ஆறு மாதக் காலங்களுக்கு அப்பதவியில் நீடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அவ்வகையில், நேற்று அவரது பணிக்காலம் முடிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி, முகமட் ராவுஸ் ஷாரிப்புக்கு பதிலாக ஒன்பதாவது தலைமை நீதிபதியாக மலாஞ் ஜூம் பதவியெற்றார்.