Home Video என்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு!

என்ஜிகே: ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ பாடல் வெளியீடு!

804
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் செல்வராகவனின் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் என்ஜிகே (நந்த கோபாலன் குமரன்). இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.

இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. சூர்யாவிற்கு இணையாக நடிகை சாய் பல்லவி, ரகுல் பிரீத்தி ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் நான் கத்துக்கிறேன் தலைவரேஎன்று சூர்யா சொல்லும் காட்சி, அவர் அரசியல்வாதியாக களம் இறங்க இருப்பதை உறுதிபடுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இத்திரைப்படத்தின் பாடலொன்று நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. ‘தண்டல்காரன் பாக்குறான், தண்டச்சோறு கேக்குறான்’ என இப்பாடல் தொடங்குகிறது. முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அப்பாடலைக் காணலாம்: