Home One Line P1 மகாதீர்- நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு கூட்டணி சந்திப்புக் கூட்டத்தில் பேசப்பட்டது

மகாதீர்- நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு கூட்டணி சந்திப்புக் கூட்டத்தில் பேசப்பட்டது

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட்டுடன் நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பது தொடர்பான பிரச்சனை சமீபத்தில் நடந்த சந்திப்புக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இருப்பினும், பிகேஆர் உள்வட்டாரங்களின்படி, இந்த திட்டம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கூட்டணி வட்டாரம் தெரிவித்துள்ளது.

“அன்வார் இப்ராகிம் மற்றும் மகாதீர் இடையேயான ஒத்துழைப்பு பிரச்சனை கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நம்பிக்கை கூட்டணி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது எந்த உறுதிப்பாடும் செய்யப்படாத நிலையில் உள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.