Home One Line P1 இன்னமும் பிரதமராக பதவி விலகியதற்கு மகாதீர் பொறுப்பேற்க மறுப்பு

இன்னமும் பிரதமராக பதவி விலகியதற்கு மகாதீர் பொறுப்பேற்க மறுப்பு

567
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பி.கே.ஆர் தலைவர் அன்வார் இப்ராகிமை நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஆதரித்ததற்காக, டாக்டர் மகாதிர் முகமட் லிம் கிட் சியாங்கை விமர்சித்ததற்கு இன்று ஓர் அறிக்கையில் கிட் சியாங் பதிலளித்துள்ளார்.

அன்வாருக்கு ஆதரவளிக்கும் முடிவை ஜசெக, பி.கே.ஆர் மற்றும் அமானா கட்சிகள் ஒப்புக் கொண்டதாக ஜசெக மூத்த தலைவர் வலியுறுத்தினார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகியதற்கு துன் மகாதீர் பொறுப்பேற்க இன்னும் மறுப்பதாக, மகாதீரின் அறிக்கையை முன்வைத்து கி சியாங் கூறினார்.

#TamilSchoolmychoice

“2018 பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையைப் பாதுகாக்க நம்பிக்கை கூட்டணியிலிருந்து பிரதமரும், அரசாங்கமும் இருக்க வேண்டும்.

“நம்பிக்கை கூட்டணி , வாரிசான், மற்றும் பெர்சாத்து ஆகிய கட்சிகளிலிருந்தும் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இன்னும் இருக்கும்போது, ​​பிரதமர் பதவியிலிருந்து விலகிய, தனது பெரிய தவறுக்கு மகாதீர் பொறுப்பேற்க மறுப்பது துரதிர்ஷ்டவசமானது,” என்று அவர் கூறினார்.