Home One Line P2 சசிகலா பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார்- டிடிவி தினகரன்

சசிகலா பிப்ரவரி 8-ஆம் தேதி சென்னை வருகிறார்- டிடிவி தினகரன்

669
0
SHARE
Ad

சென்னை: அண்மையில், சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து கடந்த மாதம் 27- ஆம் விடுதலையான சசிகலா, பிப்ரவரி 7 அன்று சென்னை வருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தனிமைப்படுத்துதல் கால அவகாசம் முடிவடைந்து, பிப்ரவரி 7- ஆம் தேதி அவர் தமிழகம் திரும்ப உள்ளதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார்

சசிகலா தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்றும், அதிமுக மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்றும் தினகரன் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, சசிகலா, 7-ஆம் தேதிக்கு பதிலாக, 8-ஆம் தேதி சென்னைக்குத் திரும்புவார் என்று தினகரன் டுவிட்டர் பதிவின் மூலமாகத் தெரிவித்துள்ளார்.

“தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் வருகிற 7- ஆம் தேதிக்கு பதிலாக 8.2.2021 திங்கட்கிழமை அன்று காலை 9 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து புறப்பட்டு தமிழகம் வருகிறார்கள்,” என்ற செய்தியினை அவர் பதிவிட்டுள்ளார்.