Home One Line P1 கொவிட்-19: விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை- சட்டம் திருத்தப்படும்

கொவிட்-19: விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை- சட்டம் திருத்தப்படும்

538
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்று பரவுவதைத் தடுக்க, விதிமுறைகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதிக்க அரசாங்கம் சட்டங்களைத் திருத்தும்.

பொருளாதாரம் முற்றிலுமாக மூடப்படுவதைத் தவிர்க்க இந்த அணுகுமுறை அவசியம் என்று, இன்று பதிவு செய்யப்பட்ட தொடலைக்காட்சி உரையில் மொகிதின் கூறினார்.

புதிய விதிகளின்படி, விதிகளை பின்பற்றாத வணிகங்களை மூடவும், வணிக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் அரசாங்கம் செயல்படும்.

#TamilSchoolmychoice

மீண்டும் மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவர்களுக்கு அபராதத்தை அதிகரிக்கவும் அரசாங்கம் விரும்புகிறது என்று அவர் கூறினார். இதற்கு அவசரநிலை சட்டத்தின் மூலம் தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988- இல் திருத்தங்கள் தேவைப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.