Home One Line P1 எம்.ஜி.ஆர் மெய்க்காப்பாளர் இராமகிருஷ்ணன் காலமானார்

எம்.ஜி.ஆர் மெய்க்காப்பாளர் இராமகிருஷ்ணன் காலமானார்

571
0
SHARE
Ad

சென்னை: முன்னாள் தமிழக முதலமைச்சரும், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் மெய்க்காப்பாளர் கே.பி.இராமகிருஷ்ணன் புதன்கிழமை காலமானார்.

சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமான இராமகிருஷ்ணன், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எம்.ஜி.ஆருடன் இருந்தவராவார்.

இராமகிருஷ்ணன் 1930- ஆம் ஆண்டில் பாலக்காட்டில் பிறந்தார். அவர் முதலில் எம்.ஜி.ஆருடன் நாடோடி மன்னனில் நடித்தார். எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்த திரைப்படங்களிலும், குடியிருந்த கோயில், மாட்டுக்கார வேலன் மற்றும் சுந்தரபாண்டியன் போன்ற பல படங்களில் சண்டைக் காட்சிகளிலும் அவர் நடித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பின்னர் அவர் எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக ஆனார். தேர்தல் பிரச்சாரங்களின் போது அவருடன் சென்றார் மற்றும் அவருடன் நாடு முழுவதும் பயணம் செய்தார்.