Home One Line P2 ஆஸ்ட்ரோ & ராகா வானொலி : பிப்ரவரி 21 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

ஆஸ்ட்ரோ & ராகா வானொலி : பிப்ரவரி 21 வரையிலான நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்

1095
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எதிர்வரும் பிப்ரவரி 15 தொடங்கி 21-ஆம் தேதி வரை ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளியேறவிருக்கும் சில நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

திங்கள், 15 பிப்ரவரி

யார்? (சீசன் 2 முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 8 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

#TamilSchoolmychoice

தவறாகச் சென்ற நண்பர்களின் சந்திப்பு 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை மர்மமான முறையில் வேட்டையாடுகிறது.

நமக் இஸ்க் கா (Namak Issk Ka) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஸ்ருதி சர்மா & ஆதித்யா ஓஜா

சம்சம் என்ற நடனக் கலைஞர், இத்துறையில் தனது வாழ்வாதாரத்திற்காக சம்பாதிப்பதால் சமூகத்தால் அவமதிக்கப்படுகிறார். ஆனால், அவள் எதிர்பாராத விதமாகத் திருமணமாகி ஒரு புகழ்பெற்றக் குடும்பத்திற்குள் நுழையும்போது அவளுடைய வாழ்க்கை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

அசுர வேட்டை (புதிய அத்தியாயங்கள் – 11-15)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹரிதாஸ், சங்கீதா கிருஷ்ணசாமி, பானுமதி & வெமன்னா அப்பனா
சில்வாவின் கணிப்பின்படி, பாதிக்கப்பட்ட ஒரு பெண் ஒரு காரில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறார்.

இருவர் (புதிய அத்தியாயங்கள் – 6-10)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

அமரனையும் பைரவியையும் சந்திக்க இறுதியாக சஹானா அனுமதிக்க முடிவு செய்கிறார். சஹானாவிற்கும் பைரவிக்கும் இடையில் கடந்தக்கால வாழ்க்கையில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதாக நிவேதா சந்தேகிக்கிறார்.

இப்படிக்கு இலா (புதிய அத்தியாயங்கள் – 9-12)

ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 8 மணி, திங்கள்-வியாழன் |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹரிந்தரா நந்த குமார், தனேஷ் ரூபன் அலகராசு, சஷ்வின் சந்திரசேகரன், யுவராஜ் கிருஷ்ணசாமி, கே. பிரகாஷ் & கிரானா ராமச்சந்திரன்

1990-இல் பிறந்த இலக்கியன் என்ற சிறுவனின் அப்பாவித்தனம், ஆர்வம் மற்றும் குறும்புத்தனம் ஆகியவை அவனைத் தொடர்ந்துத் தனது தாயுடன் சிக்கலுக்குள்ளாகவே அவனது தந்தை அவனுக்கு ஆதரவளித்தார். சன்வே புறநகரில் உள்ள ஒரு பிளாட்டில் வசிக்கும் இலா எனும் சிறுவனின் மூன்று வெவ்வேறு கட்டங்களில் அவனது வாழ்க்கையை இக்கதை விவரிக்கிறது. ஒவ்வொரு கட்டமும் 90-ஆம் ஆண்டுகளின் சகாப்தத்தை சித்தரிக்கின்றது. அதே நேரத்தில், இலாவின் பெற்றோருடனான அவனது உறவை வெளிக்கொணர்கிறது.

வியாழன், 18 பிப்ரவரி

மாறா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
Astro First (அலைவரிசை 480)

நடிகர்கள்: மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் & சிவதா நாயர்

ஒரு கடலோர நகரத்தின் சுவர்களில் குழந்தை ஓவியம் வர்ணம் பூசப்பட்டிருக்கவே அதனைப் பற்றிய ஒரு விசித்திரக் கதையை பாரு அந்நியரிடமிருந்து கேட்கவே அவள் அதை வரைந்த மாறா என்பவரைத் தேடுகிறாள்.

கூம்கேட்டு (Ghoomketu) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: நவாசுதீன் சித்திகி, ராகினி கன்னா & அனுராக் காஷ்யப்

ஆர்வமுள்ள ஒரு எழுத்தாளர் ஒரு சிறிய நகரத்திலிருந்து மும்பைக்கு ஓடுகிறார். அவர் தனது தகுதியை நிரூபிக்க தனக்கு 30 நாட்கள் அவகாசம் தருகிறார்.

வெள்ளி, 19 பிப்ரவரி

என் பெயர் ஆனந்தன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அருண் & சந்தோஷ் பிரதாப்

தனது முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கும் ஒரு குறும்பட இயக்குநர் கடத்தப்படுகிறார். கடத்தல்காரர்கள் என்ன விரும்புகிறார்கள்?

சனி, 20 பிப்ரவரி

குயின் (மலேசியாவில் பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, சனி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

மேலும் கல்விக் கற்க விரும்பும் ஒரு புத்திசாலித்தனமான இளம் பெண், ஒரு நடிகையாக மாற நிர்ப்பந்திக்கப்படுகிறார். புகழ் பெற்றப் பிறகு, அப்பெண் அரசியல் மீதான ஆதிக்கத்தால் அதில் கால் பதிக்கிறார்.

ஆன்டிம் நியே (Antim Nyay) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஜாக்கி ஷிராஃப் & நீலம் கோத்தாரி

ஜெய் சிங் மரணமடைந்த தனது தந்தைக்கு நீதி தேட முயற்சிக்கிறார். ஆனால் அவரது முயற்சிகள் யாவும் வீணாகின்றன. அவர் சீமா எனும் பெண் மீது காதல் வயப்படுகிறார். அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மீறி அப்பெண் அவருக்கு உதவுகிறார்.

ஞாயிறு, 21 பிப்ரவரி

சலாம் பச்சே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

நடிகர்கள்: மேகன் ஜாதவ், ரவி பெஹ்ல் & வ்ராஜேஷ் ஹிர்ஜி

பள்ளிக்குச் செல்லும் உடன்பிறப்புகள் ஒரே ஜோடி காலணிகளைப் பகிர்ந்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

ரசிக்க ருசிக்க சீசன் 6 (புதிய அத்தியாயம் – 2)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231), இரவு 9 மணி, ஞாயிறு |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

தொகுப்பாளர்கள்: ஷேபி & பிரசாத்

ஷேபி மற்றும் பிரசாத் ‘ரசிக்க ருசிக்க’ சீசன் 6-ஐத் இனிதே தொடங்குகிறார்கள். இம்முறை உணவு விரும்பிகளைக் கவர்ந்திழுக்கும் மலிவான மற்றும் சுவையான உணவு வகைகளைத் தேடி செல்கிறனர்.

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

திங்கள், 15 பிப்ரவரி

கலந்துரையாடல்: டிக் டோக்கிலிருந்து உங்களுக்கு என்னக் கிடைக்கிறது?

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

டிக் டோக் செயலி, பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பல ஆக்கபூர்வமானக் கருத்துக்களை இரசிகர்கள் பகிர்ந்துக் கொள்ளலாம்.

வியாழன், 18 பிப்ரவரி

நேர்காணல்: ஒரு பெண் கட்டிடப் பொறியாளரின் பயணம்

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் ( ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: கட்டடப் பொறியாளர் – தனது பயணம், வெற்றிக் கதைகள் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு பெண் கட்டடப் பொறியாளரின் நேர்காணலை ரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

வெள்ளி, 19 பிப்ரவரி

நேர்காணல்: இவ்வாரத்தின் தீர்வு

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: செல்வ மலர், விழுதுகள் சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் நடுநிலையாளர்.

டிக் டோக் செயலி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளும் விழுதுகள் சமூகத்தின் குரல் நிகழ்ச்சியின் நடுநிலையாளர் செல்வ மலரின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன் பெறலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விவரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை