Home One Line P1 கொவிட்-19: மரணங்கள் 5 – புதிய தொற்றுகள் 3,297 – பேராக்கில் மிக அதிக...

கொவிட்-19: மரணங்கள் 5 – புதிய தொற்றுகள் 3,297 – பேராக்கில் மிக அதிக தொற்றுகள்

761
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 3,297 புதிய கொவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 3,291 தொற்றுகள் உள்நாட்டில் பதிவானவை. 6 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களால் பதிவானவை.

இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 283,569 ஆக அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த ஒரு நாளில் மட்டும் 4,456 பேர் குணமடைந்து இல்லம் திரும்பியிருக்கின்றனர். தொற்றுகளில் இருந்து குணமாகி இல்லம் திரும்பியவர்களின் எண்ணிக்கை 249,209 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 33,304 ஆகும்.

சிகிச்சை பெற்று வருபவர்களில் 209 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 91 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

இன்றைய ஒரு நாளில் 5 மரணங்கள் பதிவானதைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,056- ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் பேராக்கில் பதிவாகியுள்ளன.

சிலாங்கூரை முந்தி தற்போது பேராக் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகளைக் கொண்டிருக்கிறது.

868 சம்பவங்கள் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. இதை அடுத்து 431 சம்பவங்கள் ஜோகூரிலும், கோலாலம்பூரில் 123 சம்பவங்களாக தொற்றுகள் பதிவாகியுள்ளன.