Home One Line P1 பாஸ் ஆதரவாளர் பிரிவு செயலாளர் பாரதிதாசன் பதவி விலகினார்

பாஸ் ஆதரவாளர் பிரிவு செயலாளர் பாரதிதாசன் பதவி விலகினார்

622
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பாஸ் கட்சியின் முஸ்லீம் அல்லாதவர்களுக்கான ஆதரவாளர்கள் பிரிவின் செயலாளர் எஸ்.பாரதிதாசன் அனைத்துப் பதவிகளில் இருந்தும் இன்று விலகியுள்ளார்.

கூட்டரசுப் பிரதேச மாநிலத்துக்கான பாஸ் ஆதரவாளர் பிரிவுக்குத் தலைவராகவும் பாரதிதாசன் செயல்பட்டு வந்தார். தேர்தல் இயக்குநராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார்.

கெடா மாநிலத்தில் முஸ்லீம் அல்லாதவர் விவகாரத்தில் பாஸ் மாநில அரசாங்கம் செயல்பட்ட விதத்தில் அதிருப்தி கொண்டு பாரதிதாசன் இந்த முடிவை எடுத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“பாஸ் கட்சி எல்லா மக்களுக்குமானது என்ற அடிக்கடி கூறப்பட்டாலும் அதற்கேற்ப அது நடந்து கொள்ளவில்லை. குறிப்பாக கெடா மாநிலத்தில் பாஸ் எடுத்த பல முடிவுகள் கண்டனத்துள்ளாகின” என்றும் பாரதிதாசன் கூறினார்.

தனது பதவி விலகலை கடந்த டிசம்பர் 30-ஆம் தேதியே சமர்ப்பித்து விட்டாலும் நேற்று (பிப்ரவரி 20) நடைபெற்ற கூட்டத்தில்தான் தனது பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் பாரதிதாசன் தெரிவித்தார்.