சென்னை: இயற்கை, ஈ, பேராண்மை ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அருண் விஜய், குட்டி ராதிகா உள்ளிட்டோர் நடித்த இயற்கை படம் மூலம் இயக்குனராக அவர் அறிமுகமானார். ஜீவாவின் ஈ, ஜெயம் ரவியின் பேராண்மை, ஆர்யா, விஜய் சேதுபதியின் புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசனை வைத்து லாபம் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். அவரை சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.