Home One Line P2 ‘ஜீ சேம்ப்ஸ்’ குழந்தைகளின் திறமைகளுக்கானப் போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வு

‘ஜீ சேம்ப்ஸ்’ குழந்தைகளின் திறமைகளுக்கானப் போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வு

657
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ‘ஜீ சேம்ப்ஸ்’ குழந்தைகளின் திறமைகளுக்கானப் போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

‘ஜீ சேம்ப்ஸ்’ போட்டியைப் பற்றியச் சில விவரங்கள்:

• மலேசியப் பெற்றோர்கள், இப்போது முதல் 2021 மார்ச் 31 வரை நடைபெறும் ‘ஜீ சேம்ப்ஸ்’ எனும் திறமைகளுக்கானப் போட்டியின் மெய்நிகர் நேர்முகத்தேர்வில் 5 முதல் 13 வயதுக்குட்ப்பட்ட பாடும் மற்றும் நடனமாடும் குழந்தைகளைப் பங்கேற்கச் செய்யலாம்.

#TamilSchoolmychoice

• மலேசியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து சிறந்த 20 போட்டியாளர்களின் திறமைகளை தொலைக்காட்சியில் குறிப்பாக ஜீ தமிழ் எச்டியில் (அலைவரிசை 235) வெளிப்படுத்தும் ஓர் அரிய வாய்ப்பை ‘ஜீ சேம்ப்ஸ்’ வழங்குகிறது.

• குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது போட்டியாளர்கள் பின்வரும் பிரிவுகளுக்கேற்பப் பாடும் அல்லது நடனமாடும் 2 முதல் 4 நிமிடக் காணொளியை ZeeTamilAPAC.com/ZeeChamps/ வழியாக சமர்ப்பிக்கலாம்:

o பாடுதல்

 5-8 வயது
 9-13 வயது

o நடனமாடுதல்

 5-8 வயது
 9-13 வயது

• ஒரு சர்வதேச நடுவர் குழு சமர்ப்பிப்புகளை மதிப்பீடுச் செய்வர். மேலும், வெற்றிகரமானப் போட்டியாளர்கள் ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்படுவர்.

• மேல் விவரங்களுக்கு, ZeeChampsAPAC@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது astroulagam.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வரவும்.