Home One Line P2 ஆஸ்ட்ரோ : அதிகம் மதிப்பீடு கண்ட கல்வி நிகழ்ச்சி இனி நேரலையில்!

ஆஸ்ட்ரோ : அதிகம் மதிப்பீடு கண்ட கல்வி நிகழ்ச்சி இனி நேரலையில்!

612
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோவில் இடம் பெற்று வரும் அதிகம் மதிப்பிடப்பட்ட சிறந்த கல்வி நிகழ்ச்சி இனி நேரலையாக இடம்பெறவுள்ளது

மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை மேலும் வேடிக்கையாக்க Astro TutorTV-இன் ‘SMK Study Squad’ மார்ச் 22 முதல் தனித்துவமான வழியை எடுக்கின்றது

நீங்கள் கேள்விப்பட்டீர்களா? Astro TutorTV தனது முதல் நேரலை ஊடாடும் கல்வி நிகழ்ச்சியை 22 மார்ச் 2021, திங்கட்கிழமை அறிமுகப்படுத்துகிறது!

#TamilSchoolmychoice

2021 ஜனவரியில் அறிமுகப்படுத்தியதிலிருந்து 2.6 மில்லியனுக்கும் அதிகமான இரசிகர்களை ஈர்த்த ‘SMK Study Squad’ நாட்டிலேயே அதிக மதிப்பீட்டைப் பெற்ற கல்வியறிவுசார் சொத்துடைமையாகும். அதனை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிகழ்ச்சியே ‘SMK Study Squad: LIVE’.

(www.upped.com.my/smkstudysquad) எனும் அகப்பக்கத்தில் தங்களது கேள்விகளை சமர்ப்பிப்பதன் வழி SMK Study Squad நிகழ்ச்சியின் புகழ்ப்பெற்ற நடிகர்கள் மற்றும் ஆசிரியர்களான வாஃபி, எரிசா, ஃபிக்ரி, அனிக் மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களானச் சிக் பி, சாக்கி மற்றும் யமனி ஆகியோருடன் நேரலை கேள்வி பதில் அங்கத்தில் இரசிகர்கள் உரையாடும் வாய்ப்பைப் பெறலாம்.

TV Pendidikan, Misi Studi SPM, Pelan A+ SPM மற்றும் Dekoded மற்றும் Stemsasi உள்ளிட்ட STEM நிகழ்ச்சிகள் ஆகிய பலதரப்பட்ட பாடத்திட்டங்களை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகளின் நூற்றுக்கணக்கானக் கல்விச் சார்ந்தக் காணொலிகளைக் கொண்ட ஆஸ்ட்ரோவின் இலவச இணைய முகப்பு Upped ஆகும். இது அனைத்து மலேசிய மாணவர்களும் இலவசமாக மீள்பார்வைச் செய்ய உதவுகிறது.

கற்பிக்கும் பாடத்தில் நிபுணத்துவமும் ஒட்டு மொத்தமாக 32 ஆண்டுக் காலக் கற்பித்தல் அனுபவங்களையும் கொண்ட ஆசிரியர்களான இல்மி, சுமா மற்றும் சியாஹ்மி ஆகியோரால் நேரலையின் போது பதிலளிக்கப்பட வேண்டிய கேள்விகளை SMK Study Squad நடிகர் குழுவினர் சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுப்பர். அதுமட்டுமின்றி, நேரலை நிகழ்ச்சியின் போது குறிப்பிடத்தக்க தேர்வு உதவிக்குறிப்புகள் மற்றும் நுணுக்கள் மாணவர்களுக்குப் பகிரப்படும். இந்நிகழ்ச்சி கணிதம், அறிவியல் மற்றும் வரலாறு ஆகிய மூன்று முதன்மைப் பாடங்களை உள்ளடக்கும்.

நிகழ்ச்சியின் இரண்டாம் பாகுதியில் Quiz Battle Segment போது SMK Study Squad நட்சத்திரங்கள் வினாடி வினா கேள்விகள் பாணியில் போட்டியிடுவதைக் கண்டு மகிழுங்கள். Upped அகப்பக்கத்தில் கிடைக்கப் பெறும் இதேபோன்ற வினாடி வினாக்களைக் கொண்டு மாணவர்கள் தங்களையும் மற்றவர்களையும் சவாலில் ஈடுபடுத்தும் வாய்ப்பைப் பெறலாம். அவர்கள் தங்களின் மதிப்பெண்களை இணையம் வாயிலாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துக் கொள்ளலாம்! பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் அடைவுநிலை மற்றும் முன்னேற்றங்களை அவர்களின் வினாடி வினா மதிப்பெண்களின் மூலம் சிறப்பாகக் கண்காணிக்க முடியும்.

மாணவர்களிடையே சுலபமான மற்றும் வேடிக்கையானக் கற்றலை ஊக்குவித்தல் மற்றும் அறிவுத் தக்கவைப்பை மேம்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது SMK Study Squad: LIVE

மார்ச் 22 முதல் 24 வரை, மதியம் 3.00 மணிக்கு Tutor TV அலைவரிசை 602-இல் ஒளியேறும். தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றிலும் கண்டுக் களிக்கலாம்.

அனைத்து ஆஸ்ட்ரோ கல்விச் சார்ந்த நிகழ்ச்சிளையும் எவ்வாறு பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்வது என்பது பற்றி மேலும் அறிய https://astro.com.my/HowTo எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.