Home One Line P1 அம்னோ பொதுக் கூட்டம்: பெர்சாத்து விவகாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்ப்பு

அம்னோ பொதுக் கூட்டம்: பெர்சாத்து விவகாரம் சூடு பிடிக்கும் என எதிர்பார்ப்பு

398
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த வார இறுதியில் தனது வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்த அம்னோவிற்கு தேசிய பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்துள்ளாது. இது குறித்து கட்சி தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

உலக வணிக மையமான கோலாலம்பூரில் (முன்னதாக புத்ரா உலக வணிக மையம் என்று அழைக்கப்பட்ட) அதிகபட்சமாக 3,000 பேர் அமரக்கூடிய அரங்கில் 50 விழுக்காடு பேர் அமர வாய்ப்பிருப்பதாக அகமட் மஸ்லான் கூறினார்.

முன்னதாக, இந்த கூட்டம் நேரடியாகவும், மெய்நிகர் கூட்டமாகவும் நடத்தப்படும் என்று கூறப்பட்டது.

#TamilSchoolmychoice

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கூட்டத்தில் பெர்சாத்து உடனான உறவுகளை நிறுத்துவதற்கான அம்னோவின் முன்மொழிவு விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த பொதுத் தேர்தலில் பெர்சாத்துவுடனான உறவுகளைத் துண்டிக்க கட்சி எடுத்த முடிவு தொடர்பாக, அம்னோ பொதுக் கூட்டத்தில், அம்னோ மற்றும் தேசிய கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் பிரிவுகளுக்கிடையில் சூடான விவாதத்தை எதிர்பார்க்கலாம் என்று நம்பப்படுகிறது.