Home One Line P2 சீமான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது

சீமான் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது

1052
0
SHARE
Ad

சென்னை: வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மார்ச் 12 முதல் 19 வரை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை பரிசீலனை செய்து வருகிறது.

அதன்படி, இப்போது, நாம் தமிழர் கட்சி சீமானின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. சீமான், திருவொற்றியூர் தொகுதியில் அண்மையில் தனது வேட்புமனுவை சம்ர்ப்பித்தார்.

அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்துகள் குறித்த விவரத்தையும் உறுதிமொழி பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தது சர்ச்சையை எழுப்பியது. 2019- 2020- ஆம் ஆண்டுக்கான வருமானம் 1000 ரூபாய் மட்டுமே என்று அவர் குறிப்பிட்டிருந்தார். பின்னர் இது அச்சுப்பிழை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.